'ராஜபக்சேவைச் சந்தித்தேனா...' - அலறும் கங்கை அமரன்!

ஆனால் அதில் யார் அந்த இசையமைப்பாளர் என்ற குறிப்பு ஏதுமில்லை. எனவே யார் அந்த நபர் என்று தமிழ் உணர்வாளர்கள் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தாமாகவே முன்வந்து கருத்து தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.
"நான் ராஜபக்சேவைச் சந்தித்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அதற்கான அவசியம் எனக்கில்லை.. இந்த செய்திகளைப் படித்துவிட்டு கடந்த இரு தினங்களாக நான் சிரித்துக் கொண்டுதான் உள்ளேன். கோபப்படவில்லை.." என்று கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து நாம் விசாரித்ததில், 'கங்கை அமரனும் இன்னொரு திரையுலக பிரபலமும் இலங்கை சென்றதும், ராஜபக்சேவைச் சந்தித்ததும் 100 சதவீதம் உண்மையே. இன்னும் சில தினங்களில் பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும்,' என்றார் உறுதியாக!
Comments


Click it and Unblock the Notifications