Gangai Amaran: “AR ரஹ்மான் அப்பா போட்டோவ தூக்கி வெளியே போட்டார் தீனா..” கொதித்தெழுந்த கங்கை அமரன்
சென்னை: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் விவகாரத்தில் தீனா மீதான குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. நேற்று நடைபெற்ற தேர்தலில் தேவாவின் தம்பி சபேசன் தலைவராக வெற்றிப் பெற்றார். முன்னதாக தீனாவின் முறைகேடுகள் குறித்து கங்கை அமரன் பேட்டிக் கொடுத்திருந்தார். அப்போது ஏஆர் ரஹ்மானுடன் தீனா சண்டை போட்டது பற்றியும் கங்கை அமரன் ஆதங்கமாக பேசியுள்ளார்.

கொதித்தெழுந்த கங்கை அமரன்
இசைக் கலைஞர்களுக்கான தேர்தல் விவகாரத்தில் தீனா மீதான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த தீனா, தொடர்ந்து தனது பதவியை தக்க வைக்க பல முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி கங்கை அமரன் மிக காட்டமாக பேட்டிக் கொடுத்திருந்தார்.
அதில், பவதாரிணி மறைவால் இளையராஜாவுக்குப் பதிலாக நான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்பதாகக் கூறினார். அவருடன் ஹாரிஸ் ஜெயராஜ் அப்பா, தேவாவின் தம்பி சபேசன் உள்ளிட்ட சீனியர் இசைக் கலைஞர்களும் உடன் இருந்தனர். அப்போது பேசிய கங்கை அமரன், கொரோனா காலங்களில் போலி கையெழுத்திட்டு பல லட்சம் ரூபாயை தீனா மோசடி செய்துள்ளதாக கூறினார்.
அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து இன்னும் 4 ஆண்டுகள் இசைக் கலைஞர்கள் சங்க தலைவராக வேண்டும் என தீனா முறைகேடு செய்து வருகிறார். அதனால் இந்த சங்கத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும், அதன் காரணமாகவே இப்போது ஒன்றுகூடி செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் இளையராஜாவை தீனா அவமரியாதையாக பேசியது பற்றியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
"இளையராஜாலாம் ஒரு ஆளா" என பேசிய தீனா, ஏஆர் ரஹ்மானையும் அவரது அப்பாவையும் கூட விட்டு வைக்கவில்லை. ஏஆர் ரஹ்மான் அப்பா தான் எங்கள் அனைவருக்கும் இசை சொல்லி கொடுத்தவர், அவர் தான் எங்களுக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் கொடுத்து ஊக்குவித்தார். அதனால் மரியாதை நிமித்தமாக ஏஆர் ரஹ்மானின் அப்பா சேகர் போட்டோவை சங்கத்தின் உள்ளே மாட்டி வைத்தார் அண்ணன் இளையராஜா.
ஆனால், ஏஆர் ரஹ்மானுக்கும் தீனாவுக்கும் சண்டை என்பதால் அவரது அப்பா போட்டோவை சங்கத்தில் இருந்து தூக்கி வீசியெறிந்துவிட்டார் தீனா. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என பேசிய கங்கை அமரன், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களும் எங்கள் பக்கம் தான் என சூளுரைத்தார். இதனிடையே நேற்று நடைபெற்ற இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் தேவாவின் தம்பி சபேசன் தலைவராக வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











