GOAT: மரணக்குத்து சாங்.. கோட் படத்தில் இணைந்த கங்கை அமரன்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், மூன்றாவது பாடலை வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். இதில், ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. இதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும் நடித்துள்ளனர்.

கோட் திரைப்படம்: செப்டம்பர் 5ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங், டப்பிங் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்தன. இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் இன்னொரு சகோதரர் பிரேம்ஜி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், வெங்கட் பிரபுவின் இன்னொரு குடும்ப உறுப்பினர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோட் படத்தில் 5 பாடல்: அதாவது கோட் படத்தில் ஒரு பாடலை கங்கை அமரன் எழுதி உள்ளார். அது ஒலு குத்து பாடல் என்றும், அந்த பாடலை கங்கை அமரனே பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடலை கேட்டு நல்லா இருக்கு என விஜய் பாராட்டியதையும் கங்கை அமரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் கோட் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் அடிக்கடி போனில் என்னிடம் பேசினார் என்றும், அப்போதெல்லாம் வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பிழிந்து எடுக்கிறார் என விஜய் விளையாட்டாக கம்ப்ளைன்ட் செய்தார் என்றார். அதேபோல், கோட் திரைப்படம் நீங்க நினைக்கும் மாதிரி ஆக்ஷன் ஜானர் மூவி இல்லையென்றும், இது பக்கா ஃபேமிலி சப்ஜெக்ட் என்றும் கங்கை அமரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











