என்னது மருமகளா வந்திருப்பாங்களா?.. வனிதா ஏன் இப்படி தப்பா பேசுறாங்க?.. வருத்தப்பட்ட கங்கை அமரன்

சென்னை: விஜயகுமாரின் மகளான வனிதா ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் அவர்; மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். ஜோவிகா தயாரித்திருக்கிறார். படத்தில் சிவராத்திரி என்ற இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்திய விஷயம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது.

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா என்றாலே அதிரடிதான். எதை செய்தாலும் அதில் ஒரு சர்ச்சையை சம்பாதிப்பதை அல்லது உருவாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்ற கருத்துதான் இன்டஸ்ட்ரியில் இருக்கிறது. குடும்பத்துடன் சண்டை போட்ட அவர்; மூன்று திருமணங்கள் செய்து அதிலிருந்து வெளியே வந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அலப்பறையை கூட்டினார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அவர் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியதாகவும் ஒரு பேச்சு உண்டு. அந்த அனுபவத்தின் அடிப்படையில் படம் இயக்க திட்டமிட்டார். படத்தில் ஹீரோவாக தன்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ராபர்ட் மாஸ்டரை ஃபிக்ஸ் செய்தார் வனிதா. மகள் ஜோவிகாவை தயாரிப்பாளராக்கினார்.

Gangai Amaran is upset about Vanitha Vijayakumar s Latest Controversial speech
Photo Credit:

மிஸஸ்&மிஸ்டர்: அதன்படி மிஸஸ்&மிஸ்டர் திரைப்படம் உருவானது. படமானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் வனிதா, ராபர்ட் தவிர்த்து ஷகிலா, கிரண் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படம் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது. முக்கியமாக படம் முழுவதும் ஆபாச காட்சிகள் நிரம்பி வழிகின்றன; குடும்பத்துட்ன பார்க்கவே முடியாது என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க; மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி என்ற பாடலையும் இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஆரம்பித்த பஞ்சாயத்து: ஏற்கனவே தனது பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுகொண்டிருக்கும் இளையராஜா; இந்த விஷயத்தையும் அங்கு கொண்டு சென்றிருக்கிறார். இதுகுறித்து வனிதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'இளையராஜா கடவுள் மாதிரி. அவரே நம்மிடம் கோபித்துக்கொண்டால் எங்கே போவது. அவரிடம் நான் அனுமதி கேட்டேன்; ஓகே என்று சொன்னார்' என கூறினார்.

வீட்டு மருமகள்?: அதுமட்டுமின்றி அவர், "நான் இளையராஜா வீட்டில்தான் வளர்ந்தேன். அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி போன்றவள் நான். ஜீவா அம்மாவிடம் (இளையராஜாவின் மனைவி) லாக்கர் சாவி வாங்கி நகைகளை எடுத்து அம்மனுக்கு போட்டு பூஜை செய்திருக்கிறேன். நான் அந்த வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது' என்று பேசி குண்டை போட்டார். இதனையடுத்து இந்த விஷயம் பூதாகரமாகியிருக்கிறது. பலரும், வனிதாவும், கார்த்திக் ராஜாவும் காதலித்திருப்பார்களோ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

பத்திரிகையாளர் பேட்டி: இந்நிலையில் சீனியர் பத்திரிகையாளரான தேனி கண்ணன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கார்த்திக் ராஜாவுக்கும், வனிதாவுக்கும் திருமணம் பேசினார்கள் என்பதற்கான எந்த தகவலும் இல்லை. இளையராஜாவின் குட்டி வெர்ஷன்தான் கார்த்திக் ராஜா. பெண்கள் சூழ்ந்திருந்தாலே அவர் தனியாக போய்விடுவார். இந்தப் படம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போயிருந்திருக்கும்.

இப்போது இளையராஜா வழக்கு போட்டு இந்தப் படத்தின் மீது கவனம் வர காரணமாகிவிட்டார். அந்த வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியது என்று வனிதா சொல்வதெல்லாம் சுத்த பொய். இதுதொடர்பாக கங்கை அமரனிடம் பேசினேன். அவரோ, 'அதெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் பொண்ணு ஏன் இப்படி பேசுறாங்க என்றும் தெரியவில்லை. ஏதோ தவறாக இருக்கிறது' என கூறியதாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X