என்னை மச்சான் என்று அழைத்த நடிகை அனாதை பிணமா கிடந்தாங்க - கங்கை அமரன் ஓபன் டாக்
சென்னை: தன்னை மச்சான் என்ற் அழைத்த மிகப்பெரிய நடிகை அனாதை பிணமாக கிடந்தார் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஆவர். தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைகளை கொண்டிருப்பவர். இவரது மகன்கள்தான் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆவர்.

இயக்குநராக வெற்றி பெற்ற கங்கை அமரன்
இளையராஜாவோடு இணையந்து பயணித்துக்கொண்டிருந்த கங்கை அமரன் கண்ணதாசனிடம் உதவியாளராக இணைய வேண்டும் என விருப்பப்பட்டவர். இருப்பினும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போக கதை ஆசிரியரும், பாடலாசிரியருமான பஞ்ச அருணாச்சலத்திடம் உதவியாளராக இணைந்தார். மேலும் கோழிகூவுது, கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இதில் கரகாட்டக்காரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக கங்கை அமரன்
இயக்குநராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் கங்கை அமரன். அவர் சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம் என ஏராளமான தமிழ் படங்களுக்கும், மலையாள படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதேபோல் பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் கங்கை அமரன். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

சில்க் ஸ்மிதா குறித்து கங்கை அமரன்
இந்நிலையில் கங்கை அமரன் சில்க் ஸ்மிதா குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சில்க் ஸ்மிதா வண்டிச்சக்கரம் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருப்பார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால்தான் கோழி கூவுது படத்தில் புடவையுடன் அவரை நடிக்க வைத்தேன்.

கங்கை அமரனை மச்சான் என அழைத்த சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா மிகவும் நல்ல குணமுடைய பெண். அவர் என்னை மச்சான் என்றுதான் அழைப்பார். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் எனது வீட்டுக்கு வந்து என் மனைவியுடன் சேர்ந்து பலமுறை சமைத்திருக்கிறார். அவர் எங்களுடைய குடும்ப தோழில் பழகியவர். ஆனால் ஒருநாள் திடீரென மருத்துவமனையில் அனாதை பிணமாக கிடக்கிறார் என்று கேட்டவுடன் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரிக்குக்கூட இந்த நிலைமை வரக்கூடாது" என்றார்.

எவர் க்ரீன் சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமா எத்தனையோ நடிகைகளை கண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் சில்க் ஸ்மிதா அளவு தலைமுறைகளை கடந்து ஈர்த்தது இல்லை என்பதுதான் உண்மை. சில்க்கால் கவர்ச்சி வேடத்திலும் நடிக்க முடியும், குணச்சித்திர வேடத்திலும் நடிக்க முடியும். அதற்கு உதாரணமாக கோழி கூவுது, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களை எடுத்துக்கொள்ளலாம். சில்க்கின் மிகப்பெரிய வெற்றியே அவரை இந்தத் தலைமுறையும் ரசிப்பதுதான். அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











