அடக்கொடுமையே!.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் அந்த பாட்டை மூச்சு விடாம பாடவே இல்லை.. கங்கை அமரன் பகீர்!
சென்னை: வசந்த் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற பிரபலமான “மண்ணில் இந்த காதலன்றி” பாடலில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடுவே ஒரு சரணத்தை மூச்சு விடாமல் பாடியிருப்பார்.
பல ஆண்டுகளாக ரசிகர்கள் அந்த பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மூச்சு விடாமல் பாடினார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்துள்ள கங்கை அமரன் “நாங்க உங்களை நல்லா ஏமாத்திட்டோம்” என பகீர் கிளப்பி உள்ளார்.

மண்ணில் இந்த காதலன்றி: இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாடல் உலகளவில் ஹிட் அடித்த பாடல் என்றே சொல்லலாம். உலகத் தழிழர்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான பாடல். அந்த பாடலில் வரும் “முத்துமணி ரத்தினமும்” என்கிற சரணத்தை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியது போன்று படமாக்கப்பட்டு இருக்கும். அந்த பாடலையும் அவர் மூச்சு விடாமல் பாடினார் என்று தான் பல ஆண்டுகளாக ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
மூச்சு விடாம பாடல: அப்போது முதல் முதலாக வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே அந்த பாடலை எஸ்பிபியை வைத்து பாட வைத்து எடுத்தோம். அவர் ஒன்றும் மூச்சு விடாம பாடல என பல நாள் ரகசியத்தை பொட்டுன்னு போட்டு உடைத்த கங்கை அமரன் எஸ்பிபி நீ மூச்சு விடாம பாடுனியாப்பா என அவரையும் டி.எம்.எஸையும் கேட்பது போல திடீரென வானத்தை பார்த்து பேச ஆரம்பித்து விட்டார்.
ஏமாத்திட்டோம்: நானும் அண்ணன் இளையராஜாவும் பண்ண பித்தலாட்டம் தான் அது. டெக்னாலஜின்னுலாம் சொல்லிக்கலாம். ஆனால், உண்மையை சொல்லணும்னா நாங்க உங்களை நல்லா ஏமாத்திட்டோம் என கங்கை அமரன் பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், கங்கை அமரனை கிளறினால் பல உண்மைகள் வெளியாகும் என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சினிமா என்றாலே சீட்டிங் தான் என்றும் ரசிகர்களுக்கு எப்படி பிரசன்ட் பண்றாங்க என்பதில் தான் மேஜிக் உள்ளது என்றும் ரசிகர்கள் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











