பல வருட ரகசியம்.. இளையராஜா - வைரமுத்து பிரிய இதுதான் காரணம்.. கங்கை அமரன் ஓபனா சொல்லிட்டாரு

சென்னை: இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். ஹிட் என்பது மட்டுமின்றி காலங்கடந்து கொண்டாடப்படும் க்ளாசிக் பாடல்களாகவும் அவை ஒலித்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவர் இணைந்து பணியாற்றி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என கங்கை அமரன் பேசியிருக்கிறார்.

இளையராஜா இந்த சமூகத்துக்கு செய்திருக்கும் இசை சேவை அளவில்லாதது. 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர்; ஏராளமான பாடலாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அந்தப் பாடல்கள் எல்லாம் ஹிட்டும் ஆகியிருக்கின்றன. ஆனால் அவர் - வைரமுத்து - பாரதிராஜா மூன்று பேரும் சேர்ந்த படங்களின் பாடல்கள் எப்போதுமே தனி ரகமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

மேஜிக் கூட்டணி: வைரமுத்து தனது முதல் பாடலை எழுதியதே இளையராஜாவின் இசையில்தான். நிழல்கள் படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல்தான் அது. வைரமுத்துவின் வரிகள் அனைவரையும் ஈர்த்தது. இதன் காரணமாக ராஜாவின் இசை அவை கவிஞரானார் வைரமுத்து. மண்வாசனை, புன்னகை மன்னன், சிந்து பைரவில், கடலோர கவிதைகள் என பல படங்களின் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்.

Gangai Amaran reveals the reason behind Vairamuthu and Ilayaraaja s Controversy
Photo Credit:

பிரிந்த கூட்டணி: இரண்டு பேரும் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் விரிசல் வந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் விரிவடைந்து இரண்டு பேரையுமே பிரித்துவிட்டது. அவர்களை எப்படியாவது மீண்டும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று திரைத்துறையில் இருக்கும் சிலர் எடுத்த முயற்சிகளும் வீணாகவே போயின. அவர்கள் சேர்ந்து பணியாற்றி 30 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.

கங்கை அமரன் பேச்சு: அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதுதான் பல வருட கேள்வியாக இருந்தது. இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரும், பல திறமைகளை கொண்டவருமான கங்கை அமரன் ஒரு பட விழாவில் இதுகுறித்து பேசினார். அப்போது அவர், "ஊமை விழிகல் படத்துடைய பின்னணி இசையை பார்த்த பிறகுதான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ஹேராம் படத்தில் புதுவிதமாக பாடல்கள் உருவாக நான்தான் காரணம்.

வைரமுத்து சொன்னார்: ஆனால் அதை கமலோ, இளையராஜாவோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. நனே எனக்கு சொல்லிக்கொள்கிறேன். பத்து வருடங்கள் இளையராஜா என்னை ஒதுக்கியிருந்தார். அந்த நேரத்தில்தான் ராஜாவிடம் வைரமுத்து பாடல்கள் எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில்தான் கல்லூரி விழாக்களில் பேசிய வைரமுத்து, இளையராஜா வளர்ந்துவருவதற்கு நானே காரணம், நான் எழுதும் வரிகள் காரணம் என கூறிவந்தார்.

இதனால்தான் பிரிவு: அதனை கேள்விப்பட்டு நான் அண்ணனிடம் சொன்னேன். அவர் முதலில் நம்பவில்லை. பிறகு ஒருகட்டத்தில் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போதிருந்துதான் ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் விரிசல் ஏற்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் பிரிவதற்கு, 'இளையராஜா என்னால்தான் வளர்கிறார் என வைரமுத்து தொடர்ந்து பேசியதுதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X