கங்கை அமரனின் மனைவி மணிமேகலை காலமானார்
சென்னை : தமிழ் சினிமாவில் 1970 களில் தொடங்கி, கடந்த 41 ஆண்டுகளாக பயணித்து வருபவர் கங்கை அமரன். இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவர் சுவரில்லாத சித்திரங்கள், வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.கங்கை அமரன் தற்போது தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பாஜக கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவரின் மகன் வெங்கட் பிரபு நடிகரும், இயக்குநரும் ஆவார். கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜி அமரனும் பல படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video

இந்நிலையில் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவரின் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 69 ஆகும்.
கங்கை அமரனின் மனைவியின் இறுதிச்சடங்குகள் எப்போது நடைபெறுகிறது என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. கங்கை அமரனின் மனைவியின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











