ஷூட்டிங் இல்லைன்னா.. என் வீட்டுக்கு வந்துடுவாங்க சில்க்.. மச்சான்னு கூப்பிடுவா.. கங்கை அமரன் பேச்சு!

சென்னை: இந்திய சினிமாவிலேயே இணையற்ற பெண் ஆளுமையாக ஜொலித்தவர் சில்க் ஸ்மிதா என்றும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் என் வீட்டுக்கு வந்துடுவா என்றும் சமீபத்தில் கங்கை அமரன் பேசிய பேட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி இளம் வயதில் சில்க் ஸ்மிதா உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், இன்னமும் அவரது புகழ் மற்றும் அவரது பிரபலம் ரசிகர்கள் மனங்களில் நீங்காமல் நீடித்து நிறைந்து இருக்கிறது.

ஹிட் மெட்டீரியல்

ஹிட் மெட்டீரியல்

கிராமத்தில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து ஐட்டம் டான்ஸராக களமிறங்கி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த சில்க் ஸ்மிதா ஒரு கட்டத்தில் பல படங்களின் ஹிட் மெட்டீரியலாகவே மாறினார். படத்தின் ஹீரோயின் யார் என்று கூட பார்க்காமல் ரசிகர்கள் சில்க் இருந்தால் போதும் என நினைத்து படம் பார்த்த காலமெல்லாம் மற்ற எந்த கவர்ச்சி நடிகைகளுக்கும் அமையாத ஒன்றாக இன்றளவும் உள்ளது.

டர்ட்டி பிக்சர்

டர்ட்டி பிக்சர்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவான டர்ட்டி பிக்சர் தேசிய விருதையே அள்ளியது. நடிகை வித்யா பாலன் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருப்பார். வித்யா பாலனே அந்த படத்தில் இப்படி இருக்கிறார் என்றால் சில்க் அவர் காலக்கட்டத்தில் எப்படி இருந்திருப்பார் என பலரும் வியந்து அந்த படத்தை பார்த்தனர்.

கங்கை அமரன் பேட்டி

கங்கை அமரன் பேட்டி

சமீபத்தில், கங்கை அமரன் அளித்த பேட்டியில், தனக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் இடையே உள்ள நட்பு குறித்து வெளிப்படையாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சில்க் ஸ்மிதாவின் குணத்தை கொண்ட ஒரு பெண்ணை போல நான் இதுவரை வேறு யாரையும் எந்த நடிகையையும் பார்த்ததே இல்லை எனக் கூறியுள்ளார்.

ஷூட்டிங் இல்லைன்னா வீட்டுக்கு வருவார்

ஷூட்டிங் இல்லைன்னா வீட்டுக்கு வருவார்

சினிமா ஷூட்டிங் இல்லைன்னா உடனே எனக்கு போன் போட்டு சில்க் ஸ்மிதா வீட்டுக்கு வரவா எனக் கேட்பார். என் வீட்டுக்கு வந்து என் மனைவி சமைக்கும் சமையலை ருசித்து சாப்பிடுவார். சில்க் எனக்கு மிகவும் நெருக்கமான தோழி, என்னை எப்பவுமே மச்சான் என்று தான் கூப்பிடுவா எனக் கூறியுள்ளார்.

பிரேமுஜியை கட்டிக்கிறேன்னு சொல்லுவா

பிரேமுஜியை கட்டிக்கிறேன்னு சொல்லுவா

அப்போ பிரேம்ஜி ரொம்ப சின்ன பையன்.. அவனை கொஞ்சிக்கிட்டே இருப்பாங்க சில்க் ஸ்மிதா, இவனை கல்யாணம் கட்டிக்கிட்டா என்றும் கேட்பா ஆனால், சில்க் ஸ்மிதா திடீரென உயிரிழந்தது தன்னை மனதளவில் பாதித்தது என்றும் ஒரு வார காலம் காய்ச்சலிலேயே படுத்து விட்டேன் என்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X