இளையராஜா சும்மா கத்திக்கிட்டு இருப்பான்.. என்ன.. திமிர், தெனாவட்டு.. தீனாவை விளாசிய கங்கை அமரன்!
சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் மீண்டும் தலைவராக போட்டியிடும் தீனா, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து இருக்கிறார். இதுகுறித்து இளையராஜா பேசிய போது அவர் மதிக்கவில்லை, இப்படிப்பட்ட ஆள் எங்களுக்கு தேவையில்லை என, கங்கை அமரன் இசையமைப்பாளர் தீனாவை வெளுத்து வாங்கினார்.

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் 2023ம் ஆண்டே நடக்க வேண்டியது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
கங்கை அமரன் பேட்டி: இதுகுறித்து, கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசினார். இளையராஜா வந்து பேச வேண்டி இடம் இது, எங்கள் வீட்டில் நடந்த துக்க செய்தி உங்களுக்கு தெரியும். அதனால் அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருப்பதால் அத்தனை பேரும் இதில் இணைந்து இருக்கிறோம். இந்த யூனியனின் ரூல் படி, ஒருவருக்கு இரண்டு வருட பதவி, 2 வருடம் நீட்டித்து கொள்ளலாம். ஆனால், தீனா அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் ஆண்டிருக்கிறார். அடுத்தும் தலைவர் பதவிக்கு போட்டி ஈட்டுள்ளார்.

திமிர், தெனாவட்டில்: இது யாருக்கும் பிடிக்கவில்லை, அனைவரும் தலைவர்களாக வேண்டும் என்று இளையராஜா உட்பட அனைவரும் கூறி இருக்கிறோம். இது குறித்து இளையராஜா, தீனா நீ பண்றது சரியில்லை. ஒருவர் 4 வருடம் தான் தலைவராக இருக்க முடியும் என்று சொன்னார். அவர் சும்மா ஏதாவது கத்திக்கிட்டு இருப்பாருன்னு யாராவது சொல்வாங்களா? இளையராஜாவை தூக்கி எறிந்து பேசிய ஆள் எங்களுக்கு தேவையில்லை. எங்களை வளர்த்து விட்டவர் இளையராஜா, நம் அறிவை வளர்த்தவர் இளையராஜா. அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல தீனா இருக்கிறார். அந்த மாதிரி திமிர், தெனாவட்டில் இருக்கும் ஆட்கள் நமக்கு வேண்டாம் என்றார்.
பண மோசடி: மேலும், இந்த யூனியனில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா காலத்தில் பணம் கோரி பலர் கையெழுத்து போட்டதாக சில விஷயங்களும் நடந்த இருக்கிறது. இதில் இறந்து போன பவதாரிணி கையெழுத்து போட்டு கூட பணத்தை எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய 80 லட்சத்துக்கும் மேல் பணத்தை சுருட்டியுள்ளனர். அது தெரிந்து விடும் என்பதால், அதை சரி செய்ய, மறுபடியும் தலைவராக நினைக்கிறார் என்று கங்கை அமரன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











