இளையராஜா அனாதையா இருக்காரா? கேவலப்படுத்தாதீங்க.. பயில்வானை விளாசிய கங்கை அமரன்!
சென்னை: இளையராஜா அனாதையாக இருக்கிறார், இட்லிக்கு கூட வழியில்லை என்று பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு, தெரியாத விஷயத்தை தெரிந்தது போல பேசக்கூடாது என நடிகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கடுமையாக கண்டித்து பேசி உள்ளர்.
கங்கை அமரன் எழுதிய உயிரிணையே ஆல்பத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. அதில், பேசிய கங்கை அமரன், பத்திரிகையாளர்களுடன் பல ஆண்டுகளாக நான் நல்ல நட்பில் இருக்கிறேன். நீங்கள் நல்ல விஷயத்தை மட்டும் தான் எழுத வேண்டும். ஆனால், பயில்வான் போல இட்லிக்கு வழியில்லை, தோசைக்கு வழியில்லை என்று எதற்காக எழுதுகிறீர்கள். நான் அவரை கூப்பிட்டு சொல்லிவிட்டேன். எதற்காக இல்லாத விஷயத்தை அவர் சொல்ல வேண்டும், அவர் வீட்டில் வந்த பார்த்தாரா?

கங்கை அமரன்: அதுவும் இவ்வளவு பெரிய அளவில் சாதனை படைத்த ஒருவரை ஏன் இப்படி அவமதிக்க வேண்டும்? அவர் கஷ்டப்படுகிறார், குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள், யாரும் இல்லாமல் இருக்கிறார் என்று கூறுவது முற்றிலும் தவறு. யுவன் ஷங்கர் ராஜா துபாயில் சந்தோஷமாக இருக்கிறார். கார்த்திக் ராஜா குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக நன்றாக இருக்கிறார். வீட்டில் என்ன நடக்கிறது என்று வெளியில் இருப்பவர்களுக்கு தெரியுமா? வேண்டுமானால் ஒரு வாரம் வீட்டுக்கு வந்து தங்க பார்த்துவிட்டு பேசட்டும்,
கேவலப்படுத்தாதீங்க: 50 ஆண்டுகளாக இசைத்துறையில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறோம், எனக்கு 78 வயதுக்கு மேலாகிறது, அண்ணனுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது அப்படி இருக்கும் போது எங்களை இப்படி கேவலப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒருவரை இப்படி பேசுவது சரியல்ல. பயில்வானிடம் போனில் என்ன இப்படி பேசி இருக்க என்று கேட்டேன் அவர் மன்னித்து விடுங்கள் என்று சொன்னார். இது எவ்வளவு பெரிய மட்டமான வேலை. இளையராஜா தனிமையை நாடி இருக்கிறார். நான் அவரை பார்க்க சென்றால் கூட, அவர் அமைதியாக எழுதிக்கொண்டு தான்இருப்பார். அவரை அவராக இருக்க விடுங்கள், அவர்கள் அவர்களாக இருந்தால், அவர்கள் அவர்களாக வளர்வார்கள் என்று கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications