For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அம்மா, அப்பாவை தள்ளி வைக்காதப்பா.. விஜய்க்கு கங்கை அமரன் ஆடியோ லாஞ்சில் அட்வைஸ்!

  |

  சென்னை: நடிகர் விஜய் தனது அப்பா சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபனாவை விலக்கி வைத்துள்ளது முற்றிலும் தவறு என சினிமா நிகழ்ச்சியில் பேசும் போது மேடையிலேயே கங்கை அமரன் வெளுத்து வாங்கியது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே மனக் கசப்பு நிலவி வரும் நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் பல மேடைகளில் விஜய் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேச அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

  இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தை கங்கை அமரனும் எடுத்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

  விஜய் மகன் சஞ்சய் இப்படிபட்டவரா... யுவன் சங்கர் ராஜா மேடையில் சொன்ன ரகசியம் !விஜய் மகன் சஞ்சய் இப்படிபட்டவரா... யுவன் சங்கர் ராஜா மேடையில் சொன்ன ரகசியம் !

  அப்பா மகன் பிரச்சனை

  அப்பா மகன் பிரச்சனை

  விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்த முயற்சிகளுக்கு நடிகர் விஜய் முட்டுக்கட்டை போட்டது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் மக்கள் இயக்கத்தை தன்னெழுச்சி இயக்கமாக மாற்றவே விஜய் விரும்பியது சமீப காலமாக அந்த இயக்க உறுப்பினர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவதே சான்றாக அமைந்துள்ளது.

  அம்மா அப்பா தான் முக்கியம்

  அம்மா அப்பா தான் முக்கியம்

  சமீபத்தில் நடந்த முகமறியான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன் அம்மா அப்பாவின் முக்கியத்துவத்தை இந்த படம் எடுத்து பேசியிருப்பதே பாராட்டுக்குரியது. நான், எங்க அண்ணன் இளையராஜா மற்றும் இயக்குநர் பாரதிராஜாலாம் முன்னுக்கு வந்ததே அம்மா அப்பா ஆசிர்வாதத்தால் தான் என்றார்.

  ரொம்ப தப்புங்க

  ரொம்ப தப்புங்க

  சமீபத்தில், நடிகர் விஜய் தனது அம்மா மற்றும் அப்பாவை விலக்கி வைத்துள்ளார் என்பதை கேள்விப் பட்ட உடனே ரொம்பவே டென்ஷன் ஆகிட்டேன். எஸ்.ஏ.சி விஜய்யை எப்படி வளர்த்து ஆளாக்கினார் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்தவங்க நான்.. நானெல்லாம் அறிவுரை சொல்லாமல் வேற யாரு சொல்வார். இதனால், பிரச்சனை வரும் என்றெல்லாம் நாம் பயப்படவே மாட்டேன் என்று அதிரடியாக பேசினார்.

  வளர்த்து விட்டவர்

  வளர்த்து விட்டவர்

  எத்தனை ஃபிளாப்களை சந்தித்து வந்த நிலையில், தனது மகனை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என அவங்க அப்பா எஸ்.ஏ.சி எந்த அளவுக்கு போராடினார் தெரியுமா? ரஜினியுடன் நடிக்க வைக்கலாமா? கமலுடன் நடிக்க வைக்கலாமா? விஜயகாந்த் உடன் நடிக்க வைக்கலாமா? என போராடியவர். அவரை எல்லாம் இப்படி கைவிடுவது முறையே அல்ல என்றும் கங்கை அமரன் பேசினார்.

  நிம்மதியாவே வாழ முடியாது

  நிம்மதியாவே வாழ முடியாது

  அம்மா அப்பாவை ஒருத்தன் விலக்கி வைத்து விட்டு வாழணும்னு நினைச்சா அவனெல்லாம் நிம்மதியாவே வாழ முடியாது என்றும் ஒரே போடாக போட்டார். விஜய் ரசிகர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்க நடிகருக்கு அறிவுரை சொல்லுங்க, நீங்க அம்மா அப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் நாங்களும் சேர்ந்து வாழ முடியும் எனக் கூறுங்கள் என எஸ்.ஏ. சந்திரசேகருக்காக நடிகர் விஜய்யை மேடையில் வெளுத்து வாங்கியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

  Recommended Video

  S. A. Chandrasekhar | விஜய் அரசியல் கட்சியில் இதுதான் பிரச்சனை | Filmibeat Tamil
  திட்டும் ரசிகர்கள்

  திட்டும் ரசிகர்கள்

  கங்கை அமரனின் இந்த பேச்சைக் கேட்ட விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கங்கை அமரனை கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். அது அப்பா மகன் பிரச்சனை என்றும் அவர்களது குடும்ப விவகாரம் என்றும் அடுத்தவர்கள் தலையிட வேண்டாம் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  English summary
  Gangai Amaran slams Vijay in Mugamariyaan audio launch shocks Kollywood and Vijay Fans angry on Gangai Amaren over his recent speech.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X