மரியாதையை விட்டுத்தரமாட்டோம்.. பசங்களிடம் கொடுத்துட்டோம்.. கங்கை அமரன் பளீச் பேச்சு
சென்னை: கங்கை அமரன் இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவர். பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் மெகா ஹிட் படங்களையும் இயக்கியிருக்கிறார். இளையராஜா போலவே திறமை வாய்ந்தவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பாடல்களை எழுதியிருக்கும் அவர் தற்போது பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஆவர். தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைகளை கொண்டிருப்பவர். இவரது மகன்கள்தான் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆவர். இளையராஜாவோடு இணைந்து பயணித்துக்கொண்டிருந்த கங்கை அமரன் கண்ணதாசனிடம் உதவியாளராக இணைய வேண்டும் என விருப்பப்பட்டவர். இருப்பினும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போக கதை ஆசிரியரும், பாடலாசிரியருமான பஞ்ச அருணாச்சலத்திடம் உதவியாளராக இணைந்தார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன்: மேலும் கோழிகூவுது, கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இதில் கரகாட்டக்காரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் கங்கை அமரன். அவர் சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம் என ஏராளமான தமிழ் படங்களுக்கும், மலையாள படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதேபோல் பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் கங்கை அமரன். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

செம டேலண்ட் கங்கை அமரன்: கங்கை அமரன் சரியான திறமைக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா பெயரில் வந்த சில பாடல்கள் கங்கை அமரன் இசையமைத்ததுதான் என்றும் ஒரு பேச்சு திரைத்துறையில் நெடுங்காலமாகவே உண்டு. வாலி எப்படி குறும்புத்தனமான வரிகளை பாடல்களில் வைப்பாரோ அதேபோல் கங்கை அமரனும் வைப்பார். உதாரணமாக மங்காத்தா படத்தில் இடம்பெற்ற, வாடா பின்லேடா பாடலை வாலி எழுதி கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பாடல் வரிகளில் சில மாற்றங்கள் தேவைப்பட வாலி கேட்டுக்கொண்டதற்கிணங்க கங்கை அமரன் அந்த மாற்றத்தை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரனின் பேச்சு: கங்கை அமரனை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை ஓபனாக பேசிவிடக்கூடியவர். சமீபத்தில்கூட குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக பேசியிருந்த அவர், 'கோடி கணக்கில் பணம் கொடுக்கப்படும் இசையமைப்பாளர்கள் அமைக்கும் பாடல்கள் ஹிட்டாவதில்லை. எங்கள் பாடல்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். பணத்துக்காக இளையராஜா பாடல்களை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. பணம் எல்லாம் எங்களிடம் கொட்டிக்கிடக்கிறது' என்று அதிரடி காண்பித்திருந்தார்.
கங்கை அமரனின் புதிய பேச்சு: அவரது கருத்தினை ஏற்பதற்கு அவருடைய மகன் பிரேம்ஜி தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குற்றம் தவிர் என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்ட அவர், "நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் குறை சொல்லாமல் செல்லமாட்டேன். இந்தப் படத்தின் விளம்பரத்தில் இசை ஸ்ரீகாந்த் தேவா என்று போடவில்லை. இசையமைப்பாளர்களாகிய நாங்கள் எங்களுடைய மரியாதையை எப்போதுமே விட்டுக்கொடுக்கமாட்டோம். இயக்குநர்கள் பேரரசு, ராஜகுமாரன் அரவிந்த்ராஜா போன்றோரை எனக்குப் இடிக்கும்.
பசங்களிடம் கொடுத்துவிட்டோம்: நானும் கோழி கூவுது, கரகாட்டக்காரன் படங்களை இயக்கினேன். இப்போது சும்மா இருக்கிறேன். ஏனெனில் பிள்ளைகளிடம் பொறுப்பை கொடுத்துவிட்டேன். அடுத்த தலைமுறையிடம் சினிமாவை ஒப்படைத்துவிட்டோம். பசங்க எடுக்கும் படம் நன்றாக இருக்கிறது. இந்த மாதிரி விழாக்களில் படத்தில் இடம்பெற்றிருக்கும் சுவாரசியமான இரண்டு சீன்களை ஒளிபரப்பலாம். குற்றம் தவிர் படம் வெளியாகும்போது கண்டிப்பாக ஸ்ரீகாந்த் தேவா இன்னொரு உயரத்தை தொடுவார். ஹீரோ, ஹீரொயினும் நன்றாக இருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











