கடைசி நேரத்தில் பவதாரிணி துடிச்சிட்டா… மரணத்தை நினைத்து கண்கலங்கிய கங்கை அமரன்!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி ஜனவரி மாதம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், பவதாரிணி மரணம் குறித்து கங்கை அமரன் கண்கலங்கி பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல், இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, சிவகுமார், ராமராஜன், விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், உதயா, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி: இதைத்தொடர்ந்து பவதாரிணியின் உடல் இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸ் மூலம் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, இளையராஜாவின் மனைவி ஜீவா மற்றும் தாய் சின்னதாயி நினைவிடத்திற்கு நடுவில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மயில் போல பொண்ணு ஒன்னு: பாடகி பவதாரிணி தன்னுடைய வாழ்நாளில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் அதிக அளவில் பாடியுள்ளார். ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். மலையாளம் மற்றும் தமிழில் 30க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ள பவதாரணி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒன்னு பாடலுக்குச் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.
கங்கை அமரன் பேட்டி: பவதாரிணி மறைந்து இரண்டு மாதங்கள் ஆன போதும், அந்த துயரத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மீளமுடியாமல் உள்ளனர். பவதாரிணி மறைவு குறித்து பேசிய கங்கை அமரன், பவதாரிணி வீட்டுக்கு செல்ல பெண் வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை சொல்லிக்கொண்டே தான் இருப்போம். வெளியூரில் கச்சேரிக்கு போவதாக இருந்தால், காரில் என் கூடத்தான் வருவாள். என் கூட அவ்வளவு பாசமாக இருப்பாள், அவளுக்கு புற்றுநோய் இருக்கு என்பது தெரிந்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
துடிச்சி போய்ட்டா: மருத்துவமனையில் பவதாரிணி அனுமதிக்கப்பட்ட போது கூட, அவளுக்கு என்ன நோய் என்று தெரியாது. ஆனால், பின்நாளில் வலி அதிகமானதால், இலங்கைக்கு செல்ல வேண்டி இருந்தது அப்போது தான் அவளுக்கு புற்றுநோய் பற்றியே தெரியும். நோய் பற்றி தெரிந்து கடைசி நேரத்தில் ரொம்ப துடிச்சி போய்டா. எல்லாருக்கும் போன் போட்டு பேசினார். அப்போது தான் அவர் இறந்த செய்தி வந்தது. செய்தியை கேள்விபட்டதும் வெங்கட்பிரபுவும் யுவுனும் இலங்கைக்கு சென்று உடலை கொண்டு வந்தார்கள். பவதாரிணி இழப்பை அண்ணாவால் ஏற்றுக்கொள்ளவே முடியல, அவருடைய முகத்தை என்னால பார்க்கவே முடியல என்று கங்கை அமரன் பவதாரிணி குறித்து கண்கலங்கி பேசினார்.


Click it and Unblock the Notifications











