இளையராஜா குடும்பத்துக்குள் இப்படி ஒரு பிரச்னையா?.. டாப் சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்

சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அவரது இசையில் அடுத்ததாக விடுதலை 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

அன்னக்கிளி படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். முக்கியமாக அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வரப்பில் இருந்தவரும் இசைக்காக வாயை திறந்தார். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் முதல் படத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் கிராமத்து வாசனை அடிக்கக்கூடிய இசையை எந்த சமரசமுமின்றி மக்களுக்கு கொடுத்தார் இளையராஜா.

Gangai Amaran Talks about Ilayaraaja Family Issue at Latest Interview

இசைஞானி: அன்னக்கிளி படத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வந்து அவர் புதிய பாய்ச்சலை செலுத்த எவர்க்ரீன் கூட்டணியான பாரதிராஜா - இளையராஜா கூட்டணி உருவானது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவையும், இசையையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றனர். பாரதிராஜா மட்டுமின்றி மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என அப்போதைய பீக் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு கலைஞர் கருணாநிதி இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார்.

மோதல்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு இயக்குநர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவு மோதலையும் சந்தித்தவர். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடனும் ஒருகட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பிறகு பாரதிராஜாவுடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலசந்தருடன் கடைசிவரை கருத்து வேறுபாடு தீரவே இல்லை என்று கூறப்படுகிறது. இளையராஜா கடைசிவரை பிரியாமல் பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர்தான் பாலுமகேந்திரா.

கங்கை அமரன் மோதல்: இயக்குநர்கள் போலவே தனது சகோதரர் கங்கை அமரனுடனும் மோதல் ஏற்பட்டு இளையராஜா பேசாமல் இருந்தார். இடையில் இருவரும் பேசிக்கொண்டதாகவும் ஆனால் மீண்டும் அவர்கள் பேசிக்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பவதாரிணியின் உயிரிழப்புக்குக்கூட கங்கை அமரன் வராததற்கு காரணம் அவரும் இளையராஜாவும் பேசிக்கொள்ளாததுதான் எனவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கங்கை அமரன் பேட்டி: இந்நிலையில் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "உறவு என்று இளையராஜாவின் பக்கத்தில் இப்போதைக்கு யாரும் இல்லை. எனக்காவது என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் நான் இன்று நலமாக இருக்கிறேன். ஆனால் இளையராஜாவோ அவரது மகன்களுடன் பேசிக்கொள்வதே இல்லை. பேரன் பேத்திகளோடு பேசுவார் அவ்வளவுதான். இருந்தாலும் அண்ணன்தானே என்று ஒரு நானே ஃபோன் செய்து, நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. இருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X