யார் பார்த்த வேலைடா இது?.. ‘ஏய்’ ...கங்கை அமரனுடன் கமல் பாடலை இணைத்து...இந்த வீடியோவை நீங்களே பாருங்க!

சென்னை : இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நிருபரை கண்டபடி திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த வீடியோ இணையத்தில் டிராண்டாகி வரும் நிலையில், அந்த வீடியோவை மற்றொரு வீடியோவுடன் சேர்த்து கங்கை அமரனை கிண்டலடிக்கும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர்.

கண்டனம்

கண்டனம்

இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு முன்னுரை எழுதி இருந்தார். இளையராஜாவின் இந்தக் கருத்து சில நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆவேசமாக கத்தினார்

ஆவேசமாக கத்தினார்

இதையடுத்து, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நிருபர், அந்த முன்னுரையை நீங்கள் தான் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. அதை நீங்கள் எழுதினீர்களா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கோவமடைந்த கங்கை அமரன். என்னை குற்றவாளி மாதிரி நீ எப்படி அந்த கேள்வி கேட்பா என்று ஆவேசமாக கத்தினார்.

Recommended Video

'Vijay Fans தயவுசெஞ்சு அவருக்கு இதை சொல்லுங்க..!'- GangaiAmaran
அறிவே இல்லாத நாய்

அறிவே இல்லாத நாய்

அந்த முன்னுரையை நான் தான் எழுதுனேன் என்ன பண்ணுவே... அப்படி பேசுறவன் எல்லாம் முட்டாள், அறிவே இல்லாத நாய் என்றார். மோடியை பற்றி பேசுவது என் இஷ்டம் என்று நிருபரை ஏய் நீ... போயா...வாயா ...என சகட்டு மேனிக்கு திட்டிதீர்த்துவிட்டார் இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

யார் பார்த்த வேலைடா இது?

இந்த வீடியோவை பார்த்த ஒரு இணையாவாசி... ஏய் உன்னைத்தானே பாடலில் கமல் ஆடும் வீடியோவை சேர்ந்து.... கங்கை அமரன் ஏய் என்று கத்துவதையும் வைத்து பக்காவான ஒரு வீடியோவை எடிட் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலருக்கு சிரிப்பு தாங்கவில்லை. பல நெட்டிசன்ஸ், டேய் ... எவன் பார்த்த வேலைடா இது?.. கங்கை அமரனை செதச்சுட்டானுங்க என கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ ட்ராண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X