பசியறிந்து உணவளித்த பாசக்கார அம்மா… புலம்பும் திரையுலகம் !

சென்னை : கங்கை அமரனின் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அவர்களின் தாயாருமான மணிமேகலை உடல் நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது இறப்பு அவர் குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கலங்க வைத்துள்ளது.

பாசக்கார அம்மாவை இழந்துவிட்டதாக கூறி சினிமா பிரபலங்கள் பலர் புலம்பி வருகின்றனர்.

இயக்குனர்

இயக்குனர்

கங்கை அமரன் இளையராஜாவின் இளைய சகோதரர் ஆவார். ஒன்றாக சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார்கள். இளையராஜாவின் நிழலில் இருந்த கங்கை அமரன் கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

பாடகர், பாடலாசிரியர்

பாடகர், பாடலாசிரியர்

வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு , என் தங்கச்சி படிச்சவா உள்ளிட்ட பல படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார் நல்ல பாடகர், பாடலாசிரியர், தற்போது கங்கை அமரன் தணிக்கைக்குழு உறுப்பினராக உள்ளார்.

மறைவு

மறைவு

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு அவர்களது குடும்பத்தை மட்டுமல்லாமல் பல பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாசத்தோடும்

பாசத்தோடும்

மணிமேகலை அம்மாவின் மரணம் அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியது இல்லை. பாசக்கார அம்மா, வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் அனுப்பி வைக்க மாட்டாங்களாம். வீட்டுக்கு யார் வந்தாலும் வெறும் வயிற்றோடு அனுப்பியது இல்லை. காபியாவது குடிங்க என்று உரிமையோடும் பாசத்தோடும் கூறுவார்களாம்.

புலம்பும் திரையுலகம்

புலம்பும் திரையுலகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு போனால் எப்படி வயிறார சாப்பிட்டு வரலாமோ அதேபோல, கங்கை அமரன் வீட்டுக்குப் போனாலும் சாப்பிடவைச்சித்தான் அனுப்பவாங்களாம். இவரின் தாய்மை, விருந்தோம்பலை அனுபவிக்காத சினிமா காரர்களே இருக்க முடியாது. பசியறிந்து உணவளிப்பதில் இவர்களின் இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது என்று அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல சினிமாக்காரர்களும் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X