கால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு
Recommended Video

சென்னை: இனி யாரையும் பார்த்து தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேட்க மாட்டார்கள்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படத்தில் வரும் மாரிஸ் ஆனந்தி பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது.
அந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியிருந்தார்.
கங்கை அமரன்
அண்ணன் பாடிய பாடலை கேட்டு தம்பி கங்கை அமரன், 'ஆஹா அற்புதம் அன்பு தனுஷ்க்கு பாராட்டுக்கள் .....!! யுவன் அப்படியே அப்பாவபோலவே ..... அழகான பாட்டு கண்ணுங்களா !! வாழ்க' என்று ட்வீட் போட்டார்.
மெட்டு
நீங்க தற்போது மெட்டு எல்லாம் போடுவது இல்லையா என்று ஒருவர் கேட்டதற்கு, எல்லாத்தையும் பசங்களுக்கு பிரிச்சுகுடுத்துட்டேன் என்று பதில் அளித்துள்ளார் கங்கை அமரன்.
அரசியல்
கங்கை அமரன் இசை பற்றி பேசியபோது ஒருவர் ஆர்.கே. நகரில் ஏன் நிற்கவில்லை என்று அரசியல் பேசினார். அதற்கு கங்கை அமரனோ, கால் வலி கண்ணா என்று பதில் அளித்துள்ளார்.
கேள்வி
கங்கை அமரன் அளித்த பதிலை பார்த்த பிறகும் இனி யாராவது யாரையாவது பார்த்து தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேட்பார்களா என்ன. வர வர கங்கை அமரன் ட்விட்டரில் அசத்துகிறார்.


Click it and Unblock the Notifications











