Gangers Public Review: Moeny Heist படத்தை காமெடியா எடுத்து இருக்காங்களா? கேங்கர்ஸ் பப்ளிக் விமர்சனம்

சென்னை: சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் கேங்கர்ஸ் படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், வடிவேலு, முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் கிட்டத்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வடிவேலு - சுந்தர் சி காம்பினேஷனில் மீண்டும் ஒரு படம் வந்துள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர் ஒருவர் பேசும்போது, படம் முழுக்க காமெடி தான். குடும்பத்துடன் அனைவரும் பார்க்க சிறப்பான படம். வடிவேலு இந்த படத்தில் பல கெட்டப்புகளில் வருகிறார். அவரைப் பார்த்து குழந்தைகள் சிரிக்கிறார்கள். கடைசியாக அவர் சேலை கட்டிக் கொண்டு வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது. முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதியில் காமெடியால் நிரப்பி வைத்துள்ளார்கள், வடிவேலுவின் கம்பேக் என்றால் அது இந்த படம்தான்" என கூறியுள்ளார்.

Gangers Movie Public Review in Tamil Sundar C Vadivelu Comedy Works Well

காமெடி: மற்றொரு ரசிகர், " படம் முதல் பாதி கொஞ்சம் லேக் தான். ஆனால் இரண்டாம் பாதியில் படம் நன்றாக இருந்தது. மனி ஹைஸ்ட் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு வந்தது. ஆனாலும் படத்தை காமெடியால் நிரப்பி வைத்துள்ளார்கள். வடிவேலுவின் காமெடிகள் அனைத்துமே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. இன்னமுமே அவருக்கு அந்த காமெடி வைப் அப்படியே உள்ளது. வடிவேலு படம் முழுவதும் கெத்தாக நடித்துள்ளார். தியேட்டர் முழுவதும் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள். சுந்தர் சி படத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" என கூறியுள்ளார்.

சம்மர்: " படம் 200 சதவீதம் ரொம்பவும் பிடித்திருந்தது. சுந்தர் சி. வடிவேலு என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இதுதான் கம்பேக் படம். படத்தில் பல காமெடிகள் புதிய முறையில் முயற்சி செய்து உள்ளார்கள், அவை ஒர்க்-அவுட்டும் ஆகியுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே நன்றாக என்ஜாய் செய்தார்கள். படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இந்த கோடை காலத்திற்கு ஏற்ற படம். குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்க்கலாம். படத்தில் சீரியஸான காட்சி என்று ஒன்று இல்லவே இல்லை. அதேபோல் கிளாமர் காட்சிகளும் படத்தில் இல்லை. படம் முழுக்க காமெடிதான்" என ரசிகை ஒருவர் படம் குறித்து பேசியுள்ளார்.

Gangers Movie Public Review in Tamil Sundar C Vadivelu Comedy Works Well

பட்டாசு: மற்றொரு ரசிகை கூறும்போது, " படம் சூப்பராக உள்ளது. படத்தில் காமெடிதான். வடிவேலுவை மிக நீண்ட ஆண்டுகளுக்குப்பின் முழுக்க முழுக்க காமெடியாக பார்ப்பது சிறப்பாக உள்ளது. இவ்வளவு வயதான பின்னரும் வடிவேலு இந்த அளவுக்கு தனது உழைப்பை செலுத்தியுள்ளார் என்றால், அது பாராட்டுக்குரியது. குழந்தைகளுடன் பார்க்க தரமான படம். காமெடி எல்லாம் காட்சிக்கு காட்சி பட்டாசு போல வெடித்துக் கொண்டு இருந்தது" எனக் கூறியுள்ளார். கேங்கர்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனால் படத்திற்கு ஆன்லைனில் புக்கிங் அதிகரித்து வருகிறது.

ட்விஸ்ட்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " கதையில் பயங்கரமாக காமெடி உள்ளது. படத்திலும் அதிகப்படியான ட்விஸ்ட் உள்ளது. இயக்குநர் சுந்தர் அதனை பரபரப்பாக கொண்டு போயுள்ளார். இந்த படத்தில் வடிவேலு நடித்துள்ளது, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். எத்தனையோ பேர் பெண் வேஷம் போட்டுள்ளார்கள். ஆனால் வடிவேல் சார் போட்டுள்ளது சிறப்பாக உள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து அடுத்தடுத்து காமெடிகள் வருவதால், சிரித்து சிரித்து வலிதான் எடுக்கிறது. வடிவேல் - சுந்தர் சி கூட்டணி கொஞ்சம் கூட சலிப்புத் தட்டவில்லை. குழந்தைகளுக்கு இந்த படம் பிடிக்கும். அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

வயிறு வலிக்க சிரிப்பு: குழந்தையோடு படத்திற்கு வந்திருந்த ரசிகர் ஒருவர், " ரொம்ப நாளுக்குப் பிறகு, வயிறு வலிக்கச் சிரித்து சிரித்து பார்த்த படமாக இது உள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு சாரின் காமெடியில் படம் பட்டையைக் கிளப்புகிறது. படத்தில் சுந்தர் சி சார் பெஸ்ட்டா அல்லது வடிவேலு சார் பெஸ்ட்டா என்ற கேள்வி என்பது தல பெஸ்ட்டா, தளபதி பெஸ்டா எனக் கேட்பதைப் போன்றது. இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரது காம்போவில் வரும் காட்சிகள் எல்லாம் அப்லாஸ்களை அள்ளுகிறது" என அவர் கூறியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா: ரசிகை ஒருவர் கூறும்போது, " கதைச் சொல்லிவிட்டால் படம் பார்ப்பவர்களுக்கு சுவரஸ்யம் போய்விடும். இது மட்டும் இல்லாமல், படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு சாரைப் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் மெசேஜ் என எதுவும் இல்லை ஆனால் படம் பார்க்க வந்தால் மனதார சிரித்துவிட்டு போகலாம். தொடர்ந்து பேய் படங்களாகவே எடுத்துக் கொண்டு இருந்த சுந்தர் சி சார், தீடீரென உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடிப் படம் எடுத்துள்ளதே ரொம்பவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கலாம். படம் நன்றாகவே ஒர்க் -அவுட் ஆகியுள்ளது. சுந்தர் சி சாரின் கதாபாத்திரமும் ரொம்ப பிடித்திருந்தது. இந்த சம்மருக்கு ஏற்ற படம் என தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி: மற்றொரு ரசிகை படம் குறித்து கூறும்போது, " எனது நண்பர்கள் கூறியதால்தான் இந்த படத்திற்கு வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு படம் உள்ளது. சுந்தர் சி சாருக்காகவே படத்தை இன்னொருமுறை பார்க்கலாம் எனத் தோன்றியது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு படம் சிறப்பாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

குழந்தைகள்: அதேபோல் இன்னொருவர் கூறும்போது, " குடும்பமாக நாங்கள் படத்திற்கு வந்தோம். ரொம்ப சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு போகிறோம். குழந்தைகள் தான் படத்தை ரொம்பவும் கொண்டாடினார்கள். எனது அக்கா குழந்தை 4வது தான் படிக்கிறார். ஆனால் என்ன புரிந்தது எனத் தெரியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்கிறான். வடிவேலு சார் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இது போன்ற படத்தில் நடித்திருப்பது வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படம் ரொம்பவே நன்றாக இருந்தது" எனத் தெரிவித்துளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X