மேடையில் நடிகையின் புடவையை இழுத்து நடனமாடிய நடிகர்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
ஹைதராபாத்: கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி இசைவெளியீட்டு விழா மேடையில் நடிகையின் புடவையை பிடித்து இழுத்து நடனமாடிய நடிகரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கிருஷ்ண சைதன்யா இயக்கிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான விஷ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நவின் நூலி எடிட்டிங் செய்துள்ளார்.
கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி: விஸ்வக் சென்னின் நடிப்பில் கடந்த ஆண்டு OTTயில் வெளியான Boo படத்திற்கு பிறகு இந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகும் திரைப்படம் தான் கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி. இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது.
ஹிட்டான பாடல்: படத்தை எஸ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தங்களின் சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வெங்கட் உப்பத்தூரி மற்றும் கோபி சந்த் இன்னாமுரி இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சுட்டம்லா சூசி என்ற பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.
புடவையை இழுத்து: இந்நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் விஸ்வக் சென், நடிகை நேகா செட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஸ்வக் சென் மற்றும் நேகா செட்டி ஆகியோர் இணைந்து சுட்டம்லா சூசி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள்.
மோசமான டான்ஸ்: அப்போது, நேகாவின் புடவையை பிடித்து இழுத்து, மோசமான ஆசைகளுடன் விஸ்வக் சென் நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கல்லூரியில் எப்படி நடந்து கொள்வது என்று கூட இவருக்கு தெரியாதா என்று நெட்டிசன்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











