பாலகிருஷ்ணா மீது எந்த தப்பும் இல்லை.. அஞ்சலியே சிரிக்கத்தானே செஞ்சாங்க.. டோலிவுட் ஹீரோ சப்போர்ட்!

ஹைதராபாத்: 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலியைத் தள்ளியதற்காக நந்தமுரி பாலகிருஷ்ணாவை பலரும் கண்டித்து வருகின்றனர். நடிகை அஞ்சலியை நகர்ந்து செல்ல சொல்லும் பாலகிருஷ்ணா அவர் லேசாக நகர்ந்த நிலையில், அவரை பிடித்து நகர்த்தி தள்ளுகிறார். ஆனால், அப்போது அஞ்சலி டென்ஷனாகாமல் சிரித்த வீடியோ வெளியான நிலையில், பாலகிருஷ்ணா செய்தது தவறு என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த படத்தின் ஹீரோ விஸ்வக் சென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலகிருஷ்ணா செய்தது எந்த வகையிலும் தவறு இல்லை என்றும் அது ஒரு ஜாலியான விளையாட்டு என்றும் கூறியுள்ளார். நடிகை அஞ்சலியே இதை பொருட்படுத்தாத நிலையில், சோஷியல் மீடியாக்கள் இதை ஊதிப் பெரிதாக்குவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அஞ்சலியை தள்ளி விட்ட பாலய்யா: நடிகை அஞ்சலியை ’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலய்யா தள்ளி விட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. பலரும் நடிகை அஞ்சலிக்கு எதிராக பாலய்யா செய்தது மிகப்பெரிய தவறு என அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால், பாலய்யா தட்டி விட்ட போது அஞ்சலி பயந்து நடுங்கியது போல இல்லை அவர் பாலய்யாவின் செயலை பார்த்து ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தார்.

பாலய்யா ஜோடி: கடந்த 2016 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான டிக்டேட்டர் படத்தில் பாலய்யாவுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். பாலகிருஷ்ணா குறித்து நன்றாகவே அறிந்து அஞ்சலி மேடையில் அவருடன் ஹைஃபை எல்லாம் செய்து விளையாடிய காட்சிகளும் அரங்கேறியதாகவும் ஆனால் திட்டமிட்டு இதை மட்டும் அதிகம் ஷேர் செய்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சரக்கு அடித்தாரா?: அஞ்சலியை மேடையில் தள்ளுவதற்கு முன்பாக பாலகிருஷ்ணா வாட்டர் பாட்டிலில் சரக்கு கலந்து அடித்தது போன்ற காட்சிகளும் தீயாக பரவி வரும் நிலையில் அது தொடர்பான விளக்கத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை.

பாலகிருஷ்ணாவுக்கு விஸ்வக் சென் ஆதரவு: 'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் நடிகரான விஷ்வக் சென், செய்தியாளர் சந்திப்பின் போது பாலகிருஷ்ணாவை ஆதரித்து பேசியுள்ளார். இந்த சம்பவம் ஒன்றும் சீரியஸானது அல்ல என்றும் பாலகிருஷ்ணா ஒரு நல்ல மனிதர் என்றும் விஸ்வக் சென் கூறினார். பாலகிருஷ்ணா தள்ளி விட்டதற்கு பிறகு நடிகை அஞ்சலி சிரித்ததைக் குறிப்பிட்டு, முழு சூழலையும் கருத்தில் கொள்ளுமாறு மக்களை சென் வலியுறுத்தியுள்ளார்.

ஊதிப் பெருசாக்குறாங்க: தயாரிப்பாளர் நாக வம்சியும் பாலகிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாலகிருஷ்ணாவின் செயல் சாதாரணமானது என்று வம்சி விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை ஊதிப் பெரிதாக்குவதாக அவர் கருத்து தெரிவித்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு பாலகிருஷ்ணாவும் அஞ்சலியும் சந்தோஷமாகவே கடைசி வரை பேசி சிரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹன்சல் மேத்தா விமர்சனம்: பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா பாலகிருஷ்ணாவின் செயல்களை விமர்சித்தார், அவரை ஒரு 'கேவலமானவன்' (Scumbag) என்று ட்விட்டரில் ட்வீட் போட்டு மேத்தா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். நடிகர் நகுல் மேத்தாவும் பாலகிருஷ்ணாவின் நடத்தை கேலிக்குரியது என முத்திரை குத்தியுள்ளார்.

ரசிகர்கள் கண்டனம்: நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாலகிருஷ்ணா ரசிகர்கள் அவர்களின் ஹீரோவுக்கு முடிந்தவரை முட்டுக் கொடுக்கும் முயற்சியை செய்து வரும் நிலையில், படக்குழுவினரும் அதே வேலையை பார்த்துள்ளனர். இதுதொடர்பாக நடிகை அஞ்சலி இதுவரை எந்தவொரு போஸ்ட்டும் வெளியிடவில்லை.

FAQs
Filmibeat Entertainment

More from Filmibeat

Read more about: film industry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X