மும்பையை மிரட்டிய பெண் தாதா.. 'கங்குபாய்' பயோபிக் படத்துக்கு எதிர்ப்பு.. வழக்குத் தொடர்ந்த மகன்!

By

மும்பை: பிரபல நடிகை நடித்துள்ள, பயோபிக் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரபல இந்தி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தயாரித்து இயக்கும் படம், கங்குபாய் கத்தியாவாதி.

பயோபிக் படமான இதில் இந்தி நடிகை ஆலியா பட், டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

சாந்தனு மகேஸ்வரி, இம்ரான் ஹாஸ்மி, அஜய் தேவ்கன் உட்பட பலர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இதில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. அவர் ஹாலிவுட் படங்களில் பிசியாகிவிட்டதை அடுத்து, ஹீரோயின் மாற்றப்பட்டார். இப்போது பிரபல நடிகை ஆலியா பட் நடிக்கிறார்.

கங்குபாய் கொத்தேவாலி

கங்குபாய் கொத்தேவாலி

இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. மும்பை அருகில் உள்ள காமத்திபுராவில் 60 களில் கொடிகட்டி பறந்தவர், கங்குபாய் கத்தியாவாதி. பாலியல் தொழில், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை என நிழல் உலகத் தொடர்புகளுடன் செல்வாக்காக வாழ்ந்தவர் அவர்.

மாஃபியா குயின்ஸ்

மாஃபியா குயின்ஸ்

பிறகு பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுத்தவர். அவரைப் பற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஹூசைன் ஜைதி என்பவர், 'மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை' என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தி உள்ளார்.

ஜக்குபாய் கதை

ஜக்குபாய் கதை

இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் கங்குபாய் கத்தியாவாதி வாழ்க்கை கதை சினிமாவாகிறது. அந்த கேரக்டரில் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கங்குபாயின் மகன் பாபுஜி ராவ்ஜி ஷா இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவதூறாக இருக்கிறது

அவதூறாக இருக்கிறது

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலி, ஹீரோயின் ஆலியா பட், கதையை எழுதிய ஹூசைன் ஜைதி ஆகியோர் மீது இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். பாபுஜியின் வழக்கறிஞர் கூறும்போது, ஹூசைன் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகள் ஜக்குபாய் பற்றி அவதூறாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

Recommended Video

விஜய் கூட DANCE ஆட முடியாது | ACTRESS MEGHA AKASH CHAT PART - 02 | Filmibeat Tamil
சிட்டி சிவில் கோர்ட்

சிட்டி சிவில் கோர்ட்

அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் ஜக்குபாயின் அத்தியாயத்தை நீக்க வேண்டும் என்றும் அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மும்பை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், இந்த புகாருக்கு ஜனவரி 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X