கங்குலி, ரோகித், கார்த்தி, த்ரிஷா, ராஷ்மிகாவின் மெகா பிளாக்பஸ்டர் போஸ்டர்.. ரசிகர்கள் குழப்பம்!
சென்னை: திடீரென சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்கப் போறோம் என போஸ்டர்களாக வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா மற்றும் நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா, காமெடி நடிகர் கபில் ஷர்மா உள்ளிட்ட பலர் பிளாக்பஸ்டர் போஸ்டரில் தங்கள் லுக் இருக்கும்படியான போட்டோக்களை ஷேர் செய்தனர்.
அது என்னடா பிளாக்பஸ்டர் என்றும் ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் போல கங்குலி, ரோகித் ஷர்மாவும் நடிக்க வந்துட்டாங்களா என ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு அதைப் பற்றி தேடி வருகின்றனர்.

கார்த்தி ட்வீட்
தீபாவளி விளம்பரத்துக்கு ரெடியானது போல நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மெகா பிளாக்பஸ்டர் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். சீக்கிரமே அதிரடி அறிவிப்பு வெளியாகும் வெயிட் பண்ணுங்க என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

குந்தவையும்
வந்தியத்தேவன் கார்த்தி மட்டுமல்ல குந்தவை த்ரிஷாவும் தனது போட்டோ அடங்கிய மெகா பிளாக்பஸ்டர் போஸ்டரை தனது ட்விட்டரில் ஷேர் செய்ய கார்த்தியும் த்ரிஷாவும் சேர்ந்து இன்னொரு படத்தில் நடிக்கப் போறாங்களா? என ரசிகர்கள் குஷியாகினர்.

சுல்தான் ஹீரோயினும்
பொன்னியின் செல்வன் குந்தவை மட்டுமல்ல சுல்தான் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதே போன்றவொரு போஸ்டரை வெளியிட்டு செப்டம்பர் 4ம் தேதி டிரைலரே வெளியாகப் போகுது என அறிவித்ததும் ரசிகர்கள் ரொம்பவே குழம்பிப் போய் விட்டனர்.

ரோகித் ஷர்மாவும் ட்வீட்
பிளாக்பஸ்டர் விளம்பர போஸ்டரில் செம கூலாக ரோகித் ஷர்மாவும் போஸ் கொடுத்து நிற்க, ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் வரிசையில் ரோகித் ஷர்மாவும் நடிக்கப் போறாரா என ரசிகர்கள் கேள்வியை எழுப்ப ஆரம்பித்தனர். பிளாக்பஸ்டர் அறிவிப்புக்காக செப்டம்பர் 4ம் தேதி வரை காக்க வேண்டுமா? என டென்ஷன் ஆகி உள்ளனர்.

கங்குலியும் நடிக்கிறாரா
நடிகர்களை தாண்டி கிரிக்கெட் வீரரான கங்குலியும் பிளாக்பஸ்டர் போஸ்டரை வெளியிட்ட நிலையில், நெட்டிசன்கள் உஷார் ஆகி விட்டனர். இது ஏதோ விளம்பரப் படத்திற்கான போஸ்டர் தான் போல இருக்கு என கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். செப்டம்பர் 4ம் தேதி என்ன டிரைலர் வரப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











