Ganja Karuppu - பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியல.. காரணம் அதுதான்.. கஞ்சா கருப்புக்கு இப்படி ஒரு வலியா?
சென்னை: Ganja Karuppu (கஞ்சா கருப்பு) கஞ்சா கருப்பு தனது வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதனையடுத்து அமீர் இயக்கிய ராம் படத்தில் வாழவந்தான் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்ததால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் காமெடி நடிகராக மாறினார் அவர்.

முன்னணி காமெடியன்: அந்த வாழவந்தான் கேரக்டர் அவருக்கு சினிமாவில் நல்ல வாழ்வை பெற்று கொடுத்தது. அதன்படி சிவகாசி, பம்பர கண்ணாலே, சண்டகோழி, திருப்பதி, கோடம்பாக்கம், உனக்கும் எனக்கும், அரண் என ஏராளமான படங்களில் நடித்தார். கஞ்சா கருப்புவின் வெகுளித்தனமாக முகமும், கிராமத்து ஸ்டைலில் அவர் செய்த டயலாக் டெலிவிரியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
டக்ளஸ்: கஞ்சா கருப்புவின் கரியரிலேயே முக்கியமான கதாபாத்திரம் என்றால் பருத்திவீரன் படத்தில் அவர் ஏற்றிருந்த டக்ளஸ் கதாபாத்திரம். அமீர் இயக்கத்தில் உருவான அந்தக் கதாபாத்திரம் அச்சு அசலாக கருப்புவுக்கு பொருந்திப்போனது. அன்றிலிருந்து பலராலும் அவர் டக்ளஸ் என்றே அழைக்கப்படுகிறார். பருத்திவீரனுக்கு பிறகு அவரது கிராஃப் மேற்கொண்டு உச்சம் சென்றது.
தயாரிப்பு: நிலைமை சீராக சென்றுகொண்டிருந்த சூழலில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். அவர் தயாரிப்பு பணியில் இறங்கியது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பிடிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அவரை அறிமுகப்படுத்திய பாலாகூட கஞ்சா கருப்பு தயாரிப்பு பணியில் இறங்கியதை விரும்பவில்லை. அதனை அவரே ஒரு மேடையிலும் சொல்லியிருக்கிறார்.
நஷ்டம்: படத்தை தயாரித்த கஞ்சா கருப்பு அதன் மூலம் பெருத்த நஷ்டம் அடைந்தார். அந்தப் படத்தால் சம்பாத்தித்த அனைத்தையும் இழந்து தற்போது கடனாளி ஆகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தால் தனது வாழ்வில் நேர்ந்த சோகமான நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்.
அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "என்னுடைய பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டாததால் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதனை நினைத்து எனக்கு கண்ணீர்தான் வருகிறது. நான் படம் தயாரித்ததால் எனது அக்கா மகன், என்னுடைய பாட்டி, ஐயா, மாமா ஆகியோரை நான் இழந்துவிட்டேன்" என எமோஷனலாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











