பிஸியோதெரபிஸ்டை மணந்தார் கஞ்சா கருப்பு!

இயக்குநர் பாலாவால் பிதாமகனில் அறிமுகப்படுத்தப்பட்டவர் கஞ்சா கருப்பு. தொடர்ந்து அமீரின் ராம், சண்டைக்கோழி, பருத்தி வீரன், நாடோடிகள் என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
கஞ்சா கருப்புக்கும் பிஸியோதெரபிஸ்டான எஸ்.சங்கீதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கஞ்சா கருப்பு-சங்கீதா திருமணம் இன்று காலை சிவகங்கை நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணாத்தாள் கோவிலில் நடந்தது. புரோகிதர்கள் மந்திரம் ஓத சங்கீதாவுக்கு கஞ்சா கருப்பு தாலி கட்டினார்.
திரையுலகினரும், உறவினர்களும் வாழ்த்தினர் நேரில் வந்திருந்து வாழ்த்தினர்.
பின்னர் சிவகங்கையில் உள்ள ஸ்ரீகற்பூர சத்திய சீமான் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இயக்குனர்கள் பாலா, அமீர் மற்றும் சீமான் ஆகியோர் நேரில் வந்து கருப்பு தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
நடிகை ஷகிலா, காமெடி நடிகர் சிங்கமுத்து, டைரக்டர்கள் ஜீவன், எல்.பி.ஆர்.ராஜா, ரவிராய், தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி, கோட்டை குமார், மோகன், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.
மக்கள் தொடர்பாளர் வி.கே. சுந்தர், எஸ்.என். ராஜா, தயாரிப்பாளர் வெற்றிவேல் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்கள்.


Click it and Unblock the Notifications











