இன்னொரு புது விஷயத்துல அதீத ஈடுபாடு காட்டும் தல அஜித்.. என்னன்னு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!
சென்னை: இந்த லாக்டவுனில் பல பிரபல நடிகர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
அதற்காக வீட்டில், வேலை ஆட்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு, சொகுசாக படுத்து உறங்கிக் கொண்டே எந்தவொரு பிரபலமும் இருக்கவில்லை.
புதிதாக என்ன செய்யலாம், என்ன கற்றுக் கொள்ளலாம் என்ற ஆர்வத்தை வளர்த்து வருகின்றனர்.
நம்ம தல அஜித்தும் இப்போ புதுசா ஒரு விஷயத்துல அதீத ஈடுபாடுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்னன்னு பார்ப்போம்.

மல்டி டேலன்ட்
நடிகர், ரேஸர், போட்டோகிராஃபர், சூப்பரான குக், ரைஃபில் ஷூட்டர், ஏரோ மாடலிங், ட்ரோன் என ஏகப்பட்ட திறமைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் அஜித். இந்த லாக்டவுனில் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டும் வருகிறார். மேலும், இன்னொரு விஷயத்திலும் அதிக அளவு ஈடுபாட்டையும், நேரத்தையும் செலவிட்டு வருகிறாராம் அஜித்.

கார்டனிங்
க்ரீன் இந்தியா சேலஞ்ச் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நடிகர் அஜித், தனது வீட்டு தோட்டத்தை இந்த லாக்டவுன் சமயத்தில் ஒரு சின்ன பூங்காவாகவே மாற்றி உள்ளாராம். எந்தவொரு விசயத்தை எடுத்தாலும், அதில் தனது முழு திறமையும் காட்டி ஒரு சூப்பரான மேஜிக் செய்வது நடிகர் அஜித்தின் தனிச் சிறப்பு.

75 வகை ஸ்பீசியஸ்
75 புதுவகையான செடிகள், அழகிய மலர்கள், மூலிகை செடிகள் என பார்வைக்கும், பயன்பாட்டுக்கும், பூமிக்கும் தேவையான செடிகளையும், மரக் கன்றுகளையும் நட்டு வருகிறாராம் நடிகர் அஜித். அஜித்தின் இந்த தோட்டக் கலை செயல்பாட்டை கண்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆச்சர்யப்பட்டு பாராட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டோ ரிலீசாகுமா
மகேஷ் பாபுவின் கோரிக்கையை ஏற்று தளபதி விஜய் தனது அழகான தோட்டத்தில், மரக் கன்று நடும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து இருந்தார். அது போல, தல அஜித்தின் தரிசனமும் அவரது அழகான தோட்டத்தின் புகைப்படங்களும் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் வெயிட்டிங்
கடந்த ஆண்டு தல அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான ஆண்டாக அமைந்து இருந்தது. ஒரே ஆண்டில், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இருந்தார். ஆனால், கொரோனா கண் பட்டு, இந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Recommended Video

கிளம்பிய வதந்தி
வலிமை படத்தின் அப்டேட் வராத காரணத்தால், சில நெட்டிசன்கள், தல 61 படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது போன்ற வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால், அதில் உண்மை கிடையாது, இதுவரை யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அர்ச்சனா கல்பாத்தி தெளிவு படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











