twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்மன்ட்ஸ் சேல்ஸ் மேன் டூ தேசிய விருது வென்ற நடிகர்: சூர்யாவின் அசத்தல் சக்சஸ் ஃபார்முலா!

    |

    சென்னை: சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சூர்யாவை தமிழ்த் திரையுலகமே கொண்டாடி வருகிறது.

    Recommended Video

    Soorarai Pottru National Award | ஜெயிச்சிட்டோம் மாறா | வென்று காட்டிய சூரரைப் போற்று *India

    இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவுக்கு பிறந்த நாள் பரிசாக தேசிய விருது கிடைத்துள்ளது.

    பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வரும் சூர்யா, நடிக்க வரும் முன்னர் என்னவாக இருந்தார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

    நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. வசந்த் இயக்கத்தில் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த 'நேருக்கு நேர்' திரைப்படம் சூர்யாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ஆனாலும், அவரது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிக்காட்டியது பாலா இயக்கிய 'நந்தா' திரைப்படம் தான் என்பது ரசிகர்களின் கருத்து.

    ஜெயிலர் படத்திற்கு இப்படி ஒரு அப்டேட்டா...குஷியான ரசிகர்கள் ஜெயிலர் படத்திற்கு இப்படி ஒரு அப்டேட்டா...குஷியான ரசிகர்கள்

    ஜோதிகாவுடன் காதல்

    ஜோதிகாவுடன் காதல்

    பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன் ஆகிய படங்களில் நடித்தபோது, சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் காதல், என கிசுகிசுக்கப்பட்டது. இந்தத் தகவல்கள் ஒருகட்டத்தில் உண்மையாக, இருவரது காதலும் திருமணத்தில் முடிந்தது. ஜோதிகாவின் வருகைக்குப் பிறகு திரைத்துறையில் சூர்யாவின் வளர்ச்சி இன்னும் வேகம் எடுத்தது.

    ஹிட்டு மேல ஹிட்டு

    ஹிட்டு மேல ஹிட்டு

    ஆரம்பத்தில் சூர்யாவின் நடிப்பு குறித்து எழுந்த விமர்சனங்கள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போனது. வேல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் என அடுத்தடுத்து அதிரடி ஹிட் படங்களைக் கொடுத்து மஜா செய்தார். நடிப்பு ஒருபக்கம் இருக்க சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து 2 டி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இதன்மூலம் தரமான படங்களையும் கொடுக்க தவறவில்லை. தற்போது தேசிய விருதை வென்ற 'சூரரைப் போற்று' படமும் அவர்களின் தயாரிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளக்கேற்றிய அகரம்

    விளக்கேற்றிய அகரம்

    சினிமாவில் வெற்றிவாகை சூடிய சூர்யா அத்தோடு ஓய்ந்துவிடாமல் 'அகரம்' பவுண்டேஷன் மூலம் பொதுவாழ்விலும் அடியெடுத்து வைத்தார். ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் பல மாணவர்களின் கல்விக்கு, சூர்யாவின் இந்த அகரம் பவுண்டேசன் விளக்கேற்றி வெளிச்சம் காட்டியது. இதனால் சூர்யாவுக்கு ரசிகர்களையும் கடந்து பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    கடந்து வந்த பாதை

    கடந்து வந்த பாதை

    சூர்யாவின் விண்ணைத் தொடும் வளர்ச்சிக்கு அவரின் தன்னம்பிக்கை முதல் காரணம் என்றால், இரண்டாவதாக அவரின் துணிச்சலை கூறலாம். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாகவே தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சூர்யா, அப்போது அவரின் பெயர் சரவணன். சொந்தமாக கார்மெண்ட்ஸ் தொழில் தொடங்க பணம் தேவைப்பட, சினிமாவில் நடிக்கலாம் என துணிச்சலாக முடிவெடுக்கிறார். அப்படியாகவே அவர் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமாக, இன்று விருதுகளையும் ரசிகர்களின் மனதையும் ஒருசேர சூறையாடிக் கொண்டிருக்கிறார். நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் முன்னரே அவருக்கு, 'ஆசை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் உபரித் தகவல்.

    English summary
    Garment Salesman to National Award Winning Actor: Suriya's Amazing Success Formula!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X