கால் ஷீட்டுக்காக காத்திருக்கும் லிங்குசாமி; இழுத்தடிக்கும் சூரி - கொஞ்சம் ஓவராத்தான் போராரோ?

By mohanraj

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகர் என்றால் அது சூரியை குறிப்பிடலாம். தீபாவளி திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்த சூரி தனது விடாமுயற்சியால் காமெடியனாக மாறி சிறப்பாக நடித்து வந்ததால் தன்னைச் சுற்றி மிகப் பெரிய வணிகமே நடைபெறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

மிரட்டிவிட்ட விடுதலை

வெற்றிமாறன் சூரியை வைத்து என்ன மாதிரியான படம் கொடுக்கப் போகிறார்? வெற்றிமாறன் தனது பாணி படங்களை விட்டுவிட்டு காமெடி ட்ராக்கில் களமிறங்கி விட்டாரா என்ற கேள்விகள் எல்லாம் வெற்றி மாறனை நோக்கி இருந்தாலும் வெற்றி மாறனின் இயக்கத்திற்கு சூரி எப்படி தாக்கு பிடிப்பார் என்ற கேள்வி சூரியைச் சுற்றி இருந்தது. ஆனால் இந்த சந்தேக கேள்விகளுக்கெல்லாம் நெத்திய அடியாய் அமைந்தது விடுதலை பாகம் ஒன்று. விடுதலைப் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் தனக்கு காமெடி மட்டுமல்ல சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க வரும் என சூரி நிருபித்துக் கட்டினார். இதனால் விடுதலைப்பாகும் ஒன்று வெளியான உடனே ரசிகர்கள் விடுதலை படத்தின் பாகம் 2 எப்போது வரும் என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

Actor Soori Garudan Viduthalai Part 2 Vetrimaran Sivakarthikeyan Vijaysethupathi
Actor Soori Garudan Viduthalai Part 2 Vetrimaran Sivakarthikeyan Vijaysethupathi

கதையின் நாயகன் சூரி

வெற்றிமாறன் மட்டுமில்லாமல் சூரி இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழுமலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அதேபோல் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச சினிமா ரசிகர்களின் பாராட்டை குவித்து வருகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்திலும் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். இந்நிலையில் சூரியின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கருடன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை என்றாலும் திரை கதையை தனது அசாத்திய நடிப்பால் சூரி ஓவர்டேக் செய்துள்ளார் என்று கூறவேண்டும்.

Actor Soori Garudan Viduthalai Part 2 Vetrimaran Sivakarthikeyan Vijaysethupathi

லிங்குசாமி - சூரி

தமிழில் எதார்த்த ஹீரோவாக மாறிவரும் சூரி வரும் காலங்களில் மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்பது கேள்விக்குறி தான். இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி சூரியை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் சூரி நடித்துள்ளார் . சூரி தற்போது மார்க்கெட் உள்ள நடிகராக மாறிவிட்டதால் சூரியை வைத்து தமிழில் கம் பேக் கொடுக்கலாம் என லிங்குசாமி முடிவு செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால் லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுக்க சூரி இழுத்தடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் சூரியை வைத்து லிங்கு சாமி முழுக்க முழுக்க காமெடி படம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீண்டும் காமெடி ட்ராக்கில் போகவேண்டாம் என சூரி யோசிப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் லிங்குசாமி பையா 2 படத்தை எடுப்பதிலும் ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவிய அபிமன்யூ படத்தை எடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Soori Garudan Viduthalai Part 2 Vetrimaran Sivakarthikeyan Vijaysethupathi

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X