Garudan - மீண்டும் ஹீரோயினாக விருமாண்டி அபிராமி.. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும் கருடன்

திருவனந்தபுரம்: Garudan (கருடன்) விருமாண்டி அபிராமி ஹீரோயினாக நடித்திருக்கும் கருடன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சுரேஷ் கோபி மற்றும் பிஜு மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் கருடன். அறிமுக இயக்குனர் அருண் வர்மா இயக்கி உள்ள இந்த படத்திற்கு மிதுன் மானுவல் தாமஸ் திரைக்கதை எழுதியிருக்கிறார்.'கருடன்' படம் விறுவிறுப்பான த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடனும், சிறப்பான காட்சிகளுடனும் பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் புலனாய்வு கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

Garundan Movie Got Postive Reviews from Fans

கதை என்ன?: கொச்சி நகரில் நடக்கும் ஒரு குற்றச் சம்பவத்துடன் படம் தொடங்குகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் DCP ஹரிஷ் மாதவன் என்ற கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி நடித்துள்ளார். அடுத்தடுத்த விசாரணையில் படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதுமட்டுமின்றி, படம் மற்றொரு சம்பவத்தை நோக்கி செல்லும் போது, இன்னும் பரபரப்பாக மாறுகிறது.


விறுவிறுப்பு: அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பான முறையில் முன்வைக்கிறார் இயக்குநர் அருண் வர்மா. படத்தில் சுரேஷ் கோபிக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிஜு மேனன். இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நிஷாந்த் என்ற கதாபாத்திரத்தில் பிஜு மேனன் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.

Garundan Movie Got Postive Reviews from Fans

இன்வெஸ்டிகேஷன் மட்டுமில்லை: இந்த படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் வெறும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக மட்டும் இல்லாமல், படம் சட்டப் போராட்டங்களை பற்றியும் பேசுகிறது. ரசிகர்களை கனெக்ட் செய்யும் வகையில் எமோஷனல் காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. ஒரு வித்தியாசமான கருப்பொருளை நல்ல திரைக்கதையின் உதவியுடன் எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் அருண் வர்மா.

மாஸ் காட்சிகள்: அருண் வர்மா மாஸ் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை கதைக்கு ஏற்றவாறு எப்படி வைப்பது என்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை படம் முழுவதும் த்ரில்லர் மனநிலையுடன் நம்மை கொண்டு செல்கிறது. அஜய் டேவிட் கச்சபில்லியின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. வழக்கமான பாணியில் இருந்து விலகி எடிட்டிங்கில் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீஜித்.

நட்சத்திர பட்டாளம்: கருடன் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குறிப்பாக தமிழில் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அபிராமி சிறிது இடைவேளைக்கு பிறகு, கருடன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர்த்து மேலும் சித்திக், திலீஷ் போத்தன், ஜெகதீஷ், திவ்யா பிள்ளை, தலைவாசல் விஜய் மற்றும் நிஷாந்த் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபகாலமாக வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் ஜெகதீஷ் கருடா தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார்.

அஜய் டேவிட் கட்சப்பில்லியின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருப்பதாகவும் பெரும்பாலானவர்களின் கருத்து. படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங், கலை இயக்கம் அனீஸ் நாடோடி, ஜஸ்டின் ஸ்டீபன் இணை தயாரிப்பாளராகவும், நவீன் பி தாமஸ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். படத்தை பார்த்த ரசிகர்கள் கருடன் த்ரில்லர் ஜானரில் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது என்றும் சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X