கட்டா குஸ்தி 2 ஒரு வரி விமர்சனம் முதல் டீட்டைல் டிஷ்கிரிப்ஷன் வரை.. நெட்டிசனின் ரிப்போர்ட்
சென்னை: இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்து எந்தவிதமான ஸ்பாய்லரும் இல்லாமல், விமர்சனத்தை நீண்ட பதிவாக எழுதி உள்ளார்.
அதில், " ஒரே வரில சொல்லுங்க ப்ரோனு வர்ற நண்பர்களுக்கு, "The film Works in parts, But ஓடிரும் Families தயவோட" அப்டின்றது தான் simple Headline.. பெருசா படிக்க நினைக்கற ஆட்கள் மேற்கொண்டு தொடருங்க..
Plot ஆ, Entertainer ஆ நல்ல potential இருக்கற Sequel material தான் பிடிச்சிருக்காப்ல செல்லா அய்யாவு.. ஒரு பாக்யராஜ் Style Family entertainer அ mount பண்ண Try பண்ணியிருக்காரு.. Material அளவுல முடிஞ்ச அளவுக்கு படம் Male Gaze ல Travel பண்ணுதோ, Humour சலிப்பா இருக்கோ, ஒரே Pace ல போகுதோனு தோணும்போதெல்லாம் ஒரு சீன் வெச்சு அதை balance பன்றாப்ல.. போட்டில முதல்ல வரணும்னு நினைக்கறது ஒரு ரகம்.. முழுசா ஓடி எல்லைக்கோட்டை தொட்டாலே போதும்னு விளையாடறது இன்னொரு ரகம்.. செல்லா இங்க attempt பண்ணியிருக்கறதே எப்டியாச்சும் தட்டு தடுமாறினாலும் கீழ விழுந்துடாம ஓடிப்போயி எல்லைக்கோட்டை தொட்டுட்டாலே போதும்னு தான்..

நாட்டாமை ஸ்டைல் டீச்சர்: பொண்டாட்டிய மட்டமா நினைக்கற ஆணாதிக்கவாதி Empowered women முன்னாடி வீணாப்போயி நிக்கற நல்ல காமெடியும் இருக்கு.. அதேநேரம் ஏரியா பெண்கள் இடுப்பை கிள்ளி தண்ணி பிடிக்க வரிசைல முந்துவது, நாட்டாமை படத்துல வர்ற மாதிரி பயங்கர Senseless ஆ கொச்சையா பண்ணப்பட்ட ஒரு ஆசிரியை Track comedy உம் இருக்கு.. இது காமெடில மட்டுமில்ல, எல்லா aspects லயும் படம் இப்டிதான் அட இது நல்ல idea வா இருக்கேனு ஒரு second தோணவைக்கும், அடுத்த கொஞ்ச நேரத்துலயே என்ன கன்றாவி டா இதுனும் தோண வைக்கும்..
லப்பர் பந்து: ஒரு Safe Commercial படம் எடுக்கறதுனா என்ன? நல்ல விஷயத்தை சொல்ல வந்து, முடிஞ்ச அளவுக்கு நல்ல Engagement, Craftmanship, Writing எல்லாம் Throughought ஆ இருந்து, அதை ரொம்ப காட்டமா சொன்னா, ஆடியன்ஸ் விலகி போயிடுவாங்கனு சொல்ற விதத்துல சின்ன Compromises பண்ணிக்கறது தான்.. Lubber Pandhu is one good example for that..

ரொம்பவும் தட்டையா இருக்கு: ஆனா எந்த படம் Stand எடுக்கறதுனே தெரியாம, ஆளுக்கொரு சீன் வெச்சு ரெண்டு பேர் கிட்டயும் பாஸ் மார்க் வாங்கி, ஹிட்டு படம் கொடுத்தா போதும்னு Playing for the gallery ஆ ஆடறது Safe match ஆ கூட தெரியல.. இவ்ளோ potential அ வெச்சிட்டு, பாக்யராஜ் 20 வருசம் முன்ன தன் படங்கள்ல இதான் என் கருத்துனு அழுத்தமா சொல்ற அளவுக்கு கூட எந்த stand ஐயும் எடுக்காம, "ஓகே ஓரளவுக்கு ஓடினா போதும்"னு Bare minimum க்கு ஏன் settle ஆகறாங்கனு தெரியல.. இவ்ளோ நல்ல material கைல இருந்தும் Comedies லேந்து emotions வரைக்கும், Making லேந்து Solutions வரைக்கும் எல்லாமே ரொம்ப surface level லயே இருக்கு..
பழசா இருக்குனு: 20 வருஷம் முன்ன இந்த Direction ஐ பாத்துருந்தா அப்பவே இது ஒரு 15 வருசம் outdated ஆ இருக்கேனு தோணிருக்கும்.. அவ்ளோ Left hand ல serial மாதிரி டீல் பண்ணிருக்காங்க making அ.. உலகத்துலயே பாவப்பட்ட ஆட்கள் நம்மூரு Family ஆடியன்ஸ் தான்.. கடைசி வரைக்கும் அவிங்க கண்ல சுடுசோத்தையே காட்ட மாட்டேன்றாய்ங்க பாவத்த.. Casting, Performances, Technical aspects nu everything is in the surface level just as the direction!! If one thing was good, it's the casting of that kid.. மத்தபடி, பொழுதுபோக்கு படங்களுக்கு இன்னைக்கு இருக்கற பற்றாக்குறைக்கும், வரவேற்புக்கும் இது ஓடிரும்..
வருத்தம்: ஆனா எனக்கு வருத்தம் என்னன்னா, பரீட்சைக்கு நல்லா படிச்சிட்டு வந்த பையன் 90 mark க்கு பரீட்சை எழுதி, 60 கிடைச்சா பரவால்ல.. பரீட்சையே 50 மார்க்குக்கு தான் எழுதுவேன், அதுல 40 வந்தாலும் Pass தானேனு விடற மாதிரி தான் இருக்கு இப்ப வர்ற படங்களோட, Filmmakers ஓட Trend ஏ.. ஆடியன்ஸும் அடுத்து மோர ஊத்து, அதுல பூனை கெடக்கானு பாப்போம்ற மோடுல அதை accept பண்ணிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. Normalcy is going to get normalised" என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த விமர்சனப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications