Gatta Kusthi 2: பஞ்சாயத்து ஓவர்.. இனி பாசத்தை கொட்ட வேண்டியது தானே.. கட்டா குஸ்தி 2 அவரே வாழ்த்து சொல்லிட்டாரே
சென்னை: விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே நீதிமன்றம் வரை செல்லும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் நெருக்கமான நட்பில் இருந்து இவர்கள் இருவருமே அதன் பின்னர் எதிரெதிர் துருவங்களாக மாறி நின்றனர். இருவரும் இனி இணையவே வாய்ப்பு இல்லை என்று பலரும் பேசிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் பிரச்னைகள் எல்லாம் முடிந்து, தற்போது இருவருக்கும் இடையில் மீண்டும் அதே பழைய பரஸ்பர அன்பு உருவெடுத்துள்ளது என்பதற்கு சான்றாக, தனது கட்டா குஸ்தி 2 படத்தின் புரோமோஷனுக்காக தியேட்டர் விசிட் அடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதற்காக படக்குழுவினருடன் பம்பரம் போல சுழன்று வருகிறார்.
இதன் அடிப்படையில் மதுரைக்குச் சென்று படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். மதுரைக்குச் சென்ற படக்குழுவினர் சூரியின் உணவகமான அம்மன் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டனர். அப்போது வீடியோ காலில் படக்குழுவினருடன் பேசிய சூரி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்து சொன்ன சூரி: மேலும் படம் நன்றாக உள்ளது என்று எல்லோரும் கூறுகிறார்கள், படம் பிளாக் பஸ்டர் ஆகும் என்று சிரித்தபடியே வாழ்த்துகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இணைய வாசி ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, " ஒரு நேரத்தில் காலத்தால் பிரிந்து நின்னாங்க... அதுக்கு பிறகு மீண்டும் அதே பழைய நட்பு" என்று பதிவிட்டுள்ளார்.
வரவேற்பு: கட்டா குஸ்தி 2 படம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கட்டா குஸ்தி படத்தின் சீக்குவல் தான். படம் நகைச்சுவை, ஆக்ஷன், எமோஷ்னல் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளதால் ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக வந்து படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். படக்குழுவும் இதனால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். மேலும் வார இறுதி நாளான இன்றும் படத்திற்கு பெரும்பாலும் ஹவுஸ் ஃபுல் ஆகும் அளவுக்கு புக்கிங் இருப்பதால் திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications