எளிமையாக நடந்து முடிந்த கௌதம் அதானியின் மகன் திருமணம்.. என்ன மன்னிப்பு கேட்டுருக்காரு!

அகமதாபாத்: தொழிலதிபர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் மற்றும் பிரபல வைர வியாபாரி ஜெயின் ஷாவின் மகள் திவா ஜெயின் ஷாவிற்கு இன்றைய தினம் அகமதாபாத்தில் சிறப்பான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பாரம்பரிய முறையில் ஜீத் மற்றும் திவாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடந்த 5ம் தேதி முதலே திருமண கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் நன்கொடை அளிக்க உள்ளதாக இந்த தம்பதி தெரிவித்துள்ளனர். இது குறித்து கவுதம் அதானி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Gautam Adani Jeet Adani Jeet amp amp Diva marriage amp amp

கவுதம் அதானி மகன் திருமணம்: இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் புகழ்மிக்க தொழிலதிபர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் வைர வியாபாரி ஜெயின் ஷாவின் மகள் திவா ஜெயின் ஷா இருவருக்கும் இன்றைய தினம் அகமதாபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஆடம்பரமான அதானி டவுன்ஷிப் சாந்தி கிராமில் இந்த திருமணம் நடந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை இந்த திருமணம் ஏற்படுத்திய நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்த திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கடந்த பிப்ரவரி 5ம் தேதி அகமதாபாத்தில் இந்த திருமண கொண்டாட்டங்கள் துவங்கின.

பாரம்பரிய சடங்குகள்: நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அதிகமாக இந்த திருமண நிகழ்வுகளில் பங்கேற்றனர். பாரம்பரிய வகையில் நடந்து முடிந்துள்ள இந்த திருமணத்திற்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பாரம்பரியமாக ஜெயின் மற்றும் குஜராத்தி முறையில் சடங்குகளை பின்பற்றி இந்த திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுதம் அதானி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஜீத்தும் திவாவும் திருமணம் மூலம் இணைத்துள்ளதாக அவர் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

Gautam Adani Jeet Adani Jeet amp amp Diva marriage amp amp

மன்னிப்பு கேட்ட கவுதம் அதானி: இந்த நிகழ்ச்சி மிகவும் தனிப்பட்ட விழாவாக இருந்ததால் அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கவுதம் அதானி கூறியுள்ளார். மேலும் மணமக்களுக்கு அனைவரது அன்பும் ஆசீர்வாதமும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலையில் இந்த திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த பதிவில் அவர் திருமண புகைப்படங்களையும் இணைத்துள்ளார். இந்த திருமணத்தையொட்டி 10,000 கோடி ரூபாயை அவர் நன்கொடையாக அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

10.000 கோடி ரூபாய் நன்கொடை: தரமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்னதாக ஜீத் மற்றும் திவா இருவரும் ஆண்டிற்கு 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா 10 லட்சம் நன்கொடையாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னதாக 21 பெண்களுக்கு 10 லட்சம் கொடுத்து இந்த திட்டத்தை அவர்கள் துவங்கி வைத்தனர். இதுகுறித்து கவுதம் அதானி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X