30 புகைப்படங்கள்… 30,00,000 மகிழ்ச்சியான நினைவுகள்… நெகிழ்ந்த காஜல் அகர்வால் !
சென்னை : காஜல் அகர்வால் நேற்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிறந்த நாளன்று காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் கிட்சாலு, காஜலுடன் எடுத்த 30 புகைப்படத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவின் முக்கியான நடிகையாக காஜல் அகர்வால் திகழ்ந்து வருகிறார். தற்போது இவர், பாரிஸ் பாரிஸ்,கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தொடர்
தமிழில் இவர் கடைசியாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இத்தொடர் ஹாட் ஸ்டாரில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
Recommended Video

புதிய திரைப்படம்
மேலும் குடும்ப பின்னணி கொண்ட உமா என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா இயக்க உள்ளார், அபிஷேக் கோஷ் தயாரிக்க உள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கௌதம் கிட்சலுவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், காஜல் அகர்வால் நேற்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார். திருமணத்திற்கு பிறகு இவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தனது கணவருடன் எடுத்த 30 புகைப்படத்தை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்தார்.

30,00,000 நினைவுகள்
அந்த 25 வினாடி வீடியோவில் பலரும் காணாத பல புகைப்படங்கள் உள்ளன. அவர் இந்த வீடியோவுக்கு 30 படங்கள் 30,00,000 மகிழ்ச்சியான நினைவுகளின் தொகுப்பு என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரின் லைக்குகளையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











