கவுதம் மேனன், ஜிவி பிரகாஷ் அடுத்த ஹிட் ரெடி.. செல்ஃபி படம் குறித்து தாறுமாறாக எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை : செல்ஃபி படத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லாமா நடித்துள்ளார்.
கவுதம் மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது.
கவுதம் மேனன் நடித்து இருந்தாலே அந்த படம் பல சமூக கருத்துக்களை கொண்டுள்ள படமாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக கருத்து
செல்ஃபி திரைப்படம் கல்வி மாஃபியா திரைப்படம் என்பதால் கல்வி நிறுவனத்திற்குள் நடக்கும் அரசியல்களையும், மோசடிகளையும் முழுமையாக தோலுரித்துக் காட்டும் என்று நம்பப்படுகின்றது. மேலும் இப்படத்தில் மாணவர்களின் தற்கொலைகள், கல்விக் கட்டணங்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கவுதம் ஸ்பெஷல்
கவுதம் மேனன் நடித்து இருந்தாலே அந்த படம் பல சமூக கருத்துக்களை கொண்டுள்ள படமாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கண்டிப்பாக இந்த படமும் ஒரு சமூக கருத்தை கொண்டுள்ள படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ட்ரெய்லரிலேயே கௌதம்மேனன் பேசும் வசனங்கள் அனல் பறக்கின்றது. இந்த படத்திற்கு யு /ஏ சென்சார் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஹிட்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. படிக்க முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கும், படித்தபிறகு சரியான மதிப்பும், மரியாதையும் இல்லாத மாணவர்களை பற்றிய கதையாக இருப்பதால், இன்ஜினீயர் மாணவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கோர் செய்யும் ஜிவி, கெளதம்
செல்ஃபி படத்தை எழுதி இயக்கியுள்ளார் மதிமாறன், இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் இப்படத்தை பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்திற்காக காத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மொத்தத்தில் படத்தில் ஜிவியும், கவுதம் மேனனும் ஸ்கோர் செய்வார்கள் என்று நன்றாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











