3 மணிக்கு கெளதம் மேனன் என்ன அழ சொன்னாரு.. வேட்டையாடு விளையாடு படத்தில் நடந்த சுவாரசியம் பகிர்ந்த ஜோ!

சென்னை: நடிகை ஜோதிகா வேட்டையாடு விளையாடு படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கிய படம் தான் வேட்டையாடு விளையாடு.

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி,டேனியல் பாலாஜி போன்ற பலர் நடித்திருந்தனர்.

வெற்றி இயக்குநர்

வெற்றி இயக்குநர்

2001 ஆம் ஆண்டு மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதும் அடுத்தடுத்து பல படங்களை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு அமைந்தது. மின்னலே படத்திற்கு பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல வெற்றி படங்களை கொடுத்தார் கௌதம்.

தனி ஸ்டைல்

தனி ஸ்டைல்

தனக்கென ஒரு தனி ஸ்டைலை ஃபாலோ செய்து வருகிறார் கௌதம். படத்தில் நடிக்கும் கதாநாயகன், நாயகி என்று அனைவரையும் ஸ்டைலிஷ் ஆகவும், அழகாகவும் காட்டுவதில் வல்லவர். 2003 ஆம் ஆண்டு இவர் இயக்கிய காக்க காக்க படத்தில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூர்யா ஜோதிகா இணைந்து பல வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும். காக்க காக்க படத்துக்கு என்று ஒரு தனி ஸ்பெஷல் உண்டு. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ப்ரோபோசல் சீன் முதல் பாடல்கள் வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

போலீஸ் படங்கள்

போலீஸ் படங்கள்

காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சூர்யாவின் கதாபாத்திரமும், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரமும் மிகவும் ஸ்பெஷல். இப்படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக கமலினி முகர்ஜி நடித்திருந்தார். வில்லன்களால் கொள்ளப்படுவார் கமலினி, அதன் பிறகு ஜோதிகாவுடன் ஏற்படும் காதலை அருமையாக இயக்கியிருந்தார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அழ சொன்ன கெளதம்

அழ சொன்ன கெளதம்

இந்த படத்தை பற்றியும் இந்த படத்தில் உள்ள ப்ரொபோசல் சீனை பற்றியும் ஜோதிகா மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து ஜோதிகா கூறுகையில். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ப்ரொபோசல் செய்யும் சீன் மிகவும் அற்புதமாக இருக்கும். ஏர்போட்டில் எப்பொழுதும் நைட் ஷூட்டிங் மட்டுமே அனுமதி கொடுப்பார்கள். ஏர்போர்ட்டில் அதிகாலை 3 மணிக்கு ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது. கமலஹாசன் ப்ரபோஸ் செய்த உடன் நீங்கள் அழவேண்டும் என்று கௌதம் கூறினார். ஆனால் அந்த சமயத்தில் எனக்குஅழுகையே வரவில்லை.

தானாக வரும் எமோஷன்

தானாக வரும் எமோஷன்

என் திருமணத்திற்கு முன்பு அந்த படத்தில் நடித்திருந்ததால் எனக்கு அந்த எமோஷன் சரியாக வரவில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு அம்மாவாக நான் இருக்கும் பொழுது ஃபேமிலி சென்டிமென்ட், குழந்தை, எமோஷன்ஸ் எல்லாம் அதிகமாகி விட்டது. இப்பொழுது ஏதாவது ஒரு சென்டிமென்ட் சீனை கேட்டாலே எனக்கு தானாக அழுகை வருகிறது. திருமணத்திற்கு பிறகு றுப்புகளும் அதிகமாவதால் அந்த எமோஷன் தானாகவே வந்து விடுகிறது என்று ஜோதிகா கூறியுள்ளார். ஜோதிகா பகிர்ந்துள்ள இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X