'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா?

'குயின்' வெப் தொடரில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

Recommended Video

Queen | Official Trailer | Ramya Krishnan | Gautam Vasudev Menon

சென்னை: இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் 'குயின்' வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணைய தொடர் குயின். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில் ரம்யா கிருஷ்ணன், அனிகா சுரேந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

குயின் வெப்சீரிஸின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் இத்தொடருக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறப்பு தோற்றம்

சிறப்பு தோற்றம்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ஓர் இயக்குனர் வேடத்தில் இந்தத் தொடரில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் நாயகி ஷக்கியின் முதல் பட இயக்குனர் ஸ்ரீதர் வேடத்தில் தான் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கி்றார். முதல் பட இயக்குனர் என்பதால் சக்தியை முழுமையான நடிகையாக்குவதில் இந்தப் பாத்திரத்துக்கு பொறுப்பு அதிகம்.

பிடிக்காத விஷயம்

பிடிக்காத விஷயம்

இந்த வேடத்தில் நடிப்புது குறித்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், "உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களில்கூட நீங்கள் பெரிய அளவில் சாதிக்கலாம். நீங்கள் மகத்தான வாழ்க்கையைத் தேர்வு செய்கின்றீர்களா அல்லது சந்தோஷமான வாழ்க்கையத் தேர்ந்தெடுக்கின்றீர்களா என்பதைப் பொறுத்த விஷயம் இது.

 கேமராவுக்கு பின்னால்

கேமராவுக்கு பின்னால்

சந்தோஷமாக வாழ விரும்பினால் விருப்பமானதை செய்யவும். கேமராவுக்குப் பின்னால் நின்று, ஒருவரது திறமைகளை கணித்து வெளிக்கொணரச் செய்வதன் மூலம் அவருக்கு புதிய பலத்தையும், மிகுந்த நம்பிக்கையையும் கொடுக்க முடியும்.

சக்தியின் மாற்றம்

சக்தியின் மாற்றம்

இயக்குனர் ஸ்ரீதர் செய்தது இதைத்தான். சக்தி மாற்றமடைந்த இடமும் இதுதான். எனவேதான். ஸ்ரீதரின் பண்புகள், சித்தாந்தங்கள் மற்றும் அணுகுமுறைகள் இதில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே நான் ஏன் இந்த வேடத்தை ஏற்கக்கூடாது என்று நினைத்தேன்" என்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஸ்ரீதர் தான் ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை படம் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகப்படுத்தியவர். அதன் பிறகு தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் ஸ்ரீதர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X