சந்தீப் கிஷானுக்கு வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்!

சென்னை: மனதை மயக்கும் காதல் படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக உள்ளவர் கௌதம் வாசுதேவ மேனன்.

புரியாத புதிர், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி அடுத்ததாக மைக்கேல் படத்தை இயக்கி வருகிறார்.

சந்தீப் கிஷான் ஹீரோவாக நடித்து வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிதாக வில்லன் கதாபாத்திரத்திற்கு கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

மனதை மயக்கும் காதல் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான காதல் இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த இவர் இப்பொழுது நடிகராக திகழ்கிறார். கோலி சோடா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் அனைவரையும் பிரமிக்க வைத்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

ரஞ்சித் ஜெயக்கொடி

ரஞ்சித் ஜெயக்கொடி

விஜய் சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ரஞ்ஜித் ஜெயக்கொடி அதைத் தொடர்ந்து இயக்கிய இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க காதலர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

யாருக்கும் அஞ்சேல்

யாருக்கும் அஞ்சேல்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நடிகை பிந்துமாதவி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்கும் யாருக்கும் அஞ்சேல் உள்ளிட்ட படங்களை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார்

மைக்கேல்

மைக்கேல்

இளம் இயக்குனரான இவர் கைவசம் இப்போதுள்ள படங்களை முடித்துவிட்டார். அடுத்ததாக நடிகர் சந்தீப் கிஷான் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். தயாரிப்பாளர் சௌத்ரி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு மைக்கேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் இப்படம் ரிலீசாக உள்ளது. தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கிய டீகே மற்றும் ராஜ் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன்

வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன்

முற்றிலும் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த நிலையில் மைக்கேல் படத்தில் வில்லனாக இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் கௌதம் வாசுதேவ் மேனன் இப்பொழுது சிம்புவின் நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X