Gautami Net Worth: 90களின் கனவுக் கன்னி... அப்பவே காஸ்ட்லியான நடிகை... கெளதமியின் சொத்து மதிப்பு

சென்னை: 90களில் தமிழ்த் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை கெளதமி.

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கிய கெளதமி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அப்பவே காஸ்ட்லியான நடிகையாக காணப்பட்ட கெளதமியின் சொத்து மதிப்பு குறித்து தற்போது காணலாம்.

 Gautami Net Worth: Actress Gautamis Net Worth, Assets, and Car details

கெளதமியின் சொத்து மதிப்பு: ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட கெளதமி, முதலில் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர் குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியான கெளதமி, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என 90களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

சிவா, தர்மதுரை, தேவர் மகன், ராஜா கைய வச்சா, செந்தூரப் பாண்டி போன்ற படங்களில் கெளதமியின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தனித்துவமான நடிப்பு, இளமை ததும்ப வைக்கும் கவர்ச்சி என கலந்துகட்டி ரசிகர்களை கவர்ந்த கெளதமி முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கமல்ஹாசன் உடன் லிவிங் டூ கெதரில் இருந்த கெளதமி, 2016ம் ஆண்டு அவரையும் பிரிந்துவிட்டார்.

இதனிடையே சினிமா தவிர சீரியல், டிவி ரியாலிட்டி ஷோ, அரசியல் என பிஸியாகவே காணப்பட்ட கெளதமி, தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று தனது 5வது பிறந்தநாள் கொண்டாடும் கெளதமிக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு நேரத்தில் காஸ்ட்லியான நடிகையாக வலம் வந்த கவுதமி, இன்று பெரியளவில் வருமானம் இல்லாமல் காணப்படுகிறாராம்.

சென்னை, விசாகப்பட்டிணம், ஹைதராபாத் பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளாராம் கெளதமி. இதனுடன் சேர்த்து மொத்தமாக அவரது சொத்து மதிப்பு 50 கோடி வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. 90களில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய கெளதமி தற்போது 50 கோடி மட்டுமே சொத்துடன் வாழ்ந்து வருவது திரையுலகில் அதிர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது.

அதேபோல், தற்போது ரேஞ்ச் ரோவர், BMW ரக கார்களை சொந்தமாக பயன்படுத்தி வருகிறாராம். நடிப்பு தவிர காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் கவனம் செலுத்தி வரும் கெளதமி, அதற்காகவும் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறாராம். அதன்மூலம் மாதம் 5 லட்சம் வரை வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X