»   »  விஜபி 2... ரஜினி மகள் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாகிறார் கௌதமி மகள்...?

விஜபி 2... ரஜினி மகள் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாகிறார் கௌதமி மகள்...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலையில்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார்.

Gautami's daughter to pair up with Dhanush?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீசாகி பெரும் வசூலைக் குவித்தது இப்படம்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்திலும் தனுஷே நாயகனாக நடிக்கிறார்.

ஆனால், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த அமலாபால், இப்படத்தில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு பதில் பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போது இப்படத்தில் தனுஷின் ஜோடியாக நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனுஷை சந்தித்து கௌதமி பேசியதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக தன் அம்மா கௌதமியுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் சுப்புலட்சுமி. எனவே, விரைவில் அவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rumours are doing the rounds that a star kid is getting ready to make her debut in Kollywood. Well, it is none other than Subbulakshmi, the daughter of actress Gautami, who ended her 11-year relationship with Kamal Haasan recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil