துருவ நட்சத்திரத்தை பிடிக்கப் போகும் நாயகி யார் தெரியுமா?
சென்னை: துருவ நட்சத்திரத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கவில்லையாம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு த்ரிஷா இல்லை அமலா பால் நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்தன.
சூர்யா தான் அமலா பாலை தேர்வு செய்யுமாறு கௌதமிடம் கூறினார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இந்நிலையில் கௌதமின் ஆஸ்தான நடிகை சமந்தா தான் சூர்யா ஜோடி என்றனர்.

சமந்தாவும் இல்லை
துருவ நட்சத்திரத்தில் சமந்தாவும் நடிக்கவில்லையாம்.

அசின்
பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் அசினை நடிக்க வைக்கலாமா என்று கௌதம் மேனன் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அசினும் பாலிவுட்டில் ஒன்றும் சரியாகப் போகாததால் அங்கிருந்து கிளம்பி இந்த பக்கம் வரத் தான் காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சோனம் கபூர்
நடிப்பில் கலக்கும் தனுஷின் ராஞ்ஹனா நாயகி சோனம் கபூரை நடிக்க வைக்கும் திட்டமும் கௌதமிடம் உள்ளது.

அசினா, சோனமா?
இறுதியில் சூர்யாவுடன் ஜோடி சேரப் போவது அசினா, சோனமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவர்கள் இருவரும் இல்லை வேறொரு நாயகி தான் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications











