கோலிவுட்டின் அடுத்த ஜோடி இவங்கதான்.. விரைவில் திருமணம் செய்யபோறாங்க.. யார் அந்த ஜோடி ?
சென்னை : காதல் எப்படி வரும்... எந்த நேரத்தில் வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வரும். இது நமக்கு மட்டும் இல்லீங்க திரைப்பிரபலங்களுக்கும் பொருந்தும்.
ஒரு நடிகையோ... ஒரு நடிகரோ தொடர்ந்து இரண்டு, மூன்று படங்களில் இணைந்து நடித்துவிட்டால் உடனே, கோலிவுட் வட்டாரமே அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கும்.
தமிழ் சினிமாவில் அப்படி ஒரு ஜோடி காதலில் விழுந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கௌதம் கார்த்திக்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் காதலித்து வருவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கடல் திரைப்படத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை, இருந்தாலும் திரைத்துறையில் ஜெயிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

கைவசம் உள்ள படங்கள்
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்து விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கௌதம் கார்த்திக், சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மஞ்சிமாவுடன் காதல்
தேவராட்டம் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாக மஞ்சிமாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார். திருமண தேதி குறித்த அறிவிப்பை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தந்தையைப் போல
நடிகர் கார்த்திக் நடிகை ராகினியை முதலில் திருமணம் செய்தார். பின் ராகினியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கின் முதல் மனைவி ராகினியின் மகன் தான் கார்த்திக், அவருக்கு கைன் மற்றும் தீரன் என இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். கௌதம் கார்த்திக்கும் தனது தந்தையைப் போல ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











