Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
எழில் இயக்கத்தில்.. மர்டர் மிஸ்டரியில் இணையும் பார்த்திபன், கவுதம் கார்த்திக்.. செம த்ரில்லராமே!
சென்னை: பார்த்திபனும் நடிகர் கவுதம் கார்த்திக்கும் க்ரைம் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை எழில் இயக்குகிறார். ராஜேஷ்குமாரின் நாவலை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாகிறது.
காவ்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் டி.விஜய்குமரன் தயாரிக்கிறார்.
பாண்டிராஜ்
இயக்கும்
பிரம்மாண்ட
படம்..
நடிகர்
சூர்யா
ஜோடியாகிறாரா
கார்த்தி
ஹீரோயின்.?
கோலிவுட்
தகவல்!

முருகேஷ்பாபு வசனம்
இந்தப் படத்தில், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சி. முருகேஷ்பாபு வசனம் எழுதுகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தற்காலிகமாக புரடக்ஷன் நம்பர் 2 என்று வைத்துள்ளனர்.

மர்டர் மிஸ்டரி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 19-ம் தேதி தொடங்கியது. இயக்குனர் எழில் கூறும்போது, சமீப காலமாக காமெடி படங்களை இயக்கி இருக்கிறேன். இது திரில்லர் படம். மர்டர் மிஸ்டரி கதை. கவுதம் கார்த்திக் தனியார் டிடெக்டிவாகவும் பார்த்திபன் போலீஸாகவும் நடிக்கின்றனர்.

காமெடி கலக்கல்
அனைத்து
கமர்சியல்
அம்சங்களும்
கொண்ட
த்ரில்லராக
இருக்கும்.
ராஜேஷ்குமார்
நாவலின்
தாக்கத்தில்
இந்தப்
படம்
உருவாகிறது.
அது
எந்த
நாவல்
என்பது
இப்போது
வேண்டாம்'
என்றார்.
தயாரிப்பாளர்
டி.
விஜய்குமரன்
கூறுகையில்,
படத்தின்
நட்சத்திர
நடிகர்கள்
குழுவே
படம்
காமெடி
கலக்கலாக
இருக்கக்
காரணமாக
இருக்கும்
என்பதை
அடித்து
கூறுவதாக
தெரிவித்தார்.

கமர்ஷியல் சினிமா
இயக்குநர் எழில் கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். சிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையை முதன்முறையாக க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை இயக்குகிறார். இதனால் தயாரிப்பாளராக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கண்டிப்பாக கவரும்
தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பது, ரசிகர்களை கண்டிப்பாக கவரும். அவர்களின் பலம் படத்தை பெரிய வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.