தளபதி விஜய் பற்றி தெரிந்தும் விஷப் பரீட்சையில் ஈடுபடும் கவுதம் கார்த்திக்?

By Siva

சென்னை: தளபதி விஜய்யின் மெர்சல் படத்தோடு மோதுகிறது கவுதம் கார்த்திக்கின் ஹர ஹர மகாதேவகி.

பொதுவாக அஜீத் அல்லது விஜய் படங்கள் வந்தால் வளர்ந்து வரும் ஹீரோக்கள், சிறு பட்ஜெட் பட இயக்குனர்கள் தங்களின் படங்களை வெளியிட தயங்குவார்கள்.

தல, தளபதி படம் நம் படங்களை தூக்கி சாப்பிட்டுவிடும் என்ற அச்சமே அதற்கு காரணம்.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

தல, தளபதி படங்கள் வரும்போது சிறு பட்ஜெட், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம். அனைத்து தியேட்டர்களும் தல, தளபதி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும்.

மெர்சல்

மெர்சல்

தளபதியின் மெர்சல் படத்துடன் கவுதம் கார்த்திக்கின் ஹர ஹர மாகதேவகி படத்தை மோத விடுகிறார்கள். கவுதம் கார்த்திக், நிக்க கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள காமெடி படமான ஹர ஹர மகாதேவகியை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ளார்.

ஹர ஹர மகாதேவகி

ஹர ஹர மகாதேவகி

அடல்ட் காமெடிக்காக கவுதம் படத்தின் ட்ரெய்லருக்கு இளசுகளிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. ஹர ஹர மகாதேவகியும், மெர்சலும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

துணிச்சல்

தளபதி பட வியாபாரம் பற்றி தெரிந்தும் துணிந்து மோதும் ஹர ஹர மகாதவேகி படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நல்ல கதையாக இருந்தால் யார் படம் வெளியானாலும் வெற்றி கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X