இப்படியொரு கணவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. மஞ்சிமா மோகன் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகரித்த நிலையில், சினிமாவில் அதிக பட வாய்ப்புகளை இழந்து வந்தார். ஆனால், தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த நடித்த நிலையில், இருவரும் காதல் வயப்பட திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்தின் போது கூட அங்கே இருந்த சிலர், தனது உடல் எடை குறித்து பாடி ஷேமிங் செய்ததாக மஞ்சிமா மோகன் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில், ஆளே அடையாளம் தெரியாதது போல பழைய பாடி ஷேப்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.
சிம்பு படத்தில் அறிமுகம்: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழகான மலையாள நடிகையாக அறிமுகமானார் மஞ்சிமா மோகன். மலையாள திரைப்படங்களில் நிவின் பாலி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மஞ்சிமா மோகன் நடித்த பல படங்கள் ஹிட் அடித்த நிலையில், தமிழிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
1997ம் ஆண்டே கலியூஞ்சல் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மஞ்சிமா பல படங்களில் சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். ஒரு வடக்கன் செல்ஃபி படத்தில் ஹீரோயினாக அவர் அறிமுகமான நிலையில், அதன் பின்னர் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கெளதம் கார்த்தியுடன் திருமணம்: சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், தேவராட்டம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் கடந்த ஆண்டு கெளதம் கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்டார்.
தனது உடல் எடை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மஞ்சிமா இருந்து வந்தாலும், தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாடி ஷேமிங் செய்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைத்து வருகிறார்.

கணவர் ஃபுல் சப்போர்ட்: உடல் எடையை குறைக்க தீவிர வொர்க்கவுட்டில் ஈடுபட்டு வரும் வீடியோவை மஞ்சிமா மோகன் சற்று முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், அதில், ஒரு இடத்தில் அவருக்கு கெளதம் கார்த்திக் உதவி செய்வதை பார்த்த ரசிகர்கள் வாவ் போட்டு இப்படியொரு கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











