அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்.. தனிமையில் வாடிய கௌதம் கார்த்திக்!
சென்னை: Gautham Karthik ( கௌதம் கார்த்திக் பேட்டி) பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நவரச நாயகன் கார்த்திக். இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து 80 மற்றும் 90 காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தார்.
இவர் 1988ஆம் ஆண்டு சோலைக்குயில் எனும் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டர். இந்த தம்பதிக்கு கௌதம் கார்த்திக், கையன் கார்த்திக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகு, தன் மனைவியின் சொந்த தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

கார்த்திக்கின் மகன்: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன் பின் என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
காதல் திருமணம்: கடந்த ஆண்டு இவர் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கௌதம் கார்த்திக் பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.
தனிமையில் இருந்தேன்: இதில், அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு பின் அம்மா அப்பா பிரிந்துவிட்டார்கள். இது பல பேருக்கு தெரியாது. இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு நான் தனிமையில் வாடினேன். நான் அம்மாவுடன் தான் இருந்தேன் அப்பா சென்னையில் இருந்தார். அவரிடமிருந்து வருஷத்திற்கு இரண்டு போன் கால் மட்டுமே வரும், அதேபோல எப்போதாவதுதான் என்னை பார்க்க வருவார்.
அம்மா தான் எல்லாம்: என்னை கண்ணும் கருத்துமா வளர்த்தது என் அம்மா தான், அவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து என்னையும் என் தம்பியையும் வளர்த்தார்கள். தனி பெண்ணாக இருந்து இரண்டு குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. நான் தனிமையில் மனம் வாடிய போது என் நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள் என்று கௌதம் கார்த்திக் மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











