என்ன அறிவிப்பே ஆபாசமா இருக்கே.. இருட்டு அறையில் முரட்டு குத்து 2 ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது.

Recommended Video

SAREE கட்ட தெரியாது BIGG BOSS கத்துக்கொடுத்தார் | YASHIKA ANAND INTERVIEW | FILMIBEAT TAMIL

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

அந்த படத்தில் ஹீரோவாக நடித்த கெளதம் கார்த்திக், பார்ட் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்.

ஹர ஹர மஹாதேவகி

ஹர ஹர மஹாதேவகி

ஹர ஹர மஹாதேவகி எனத் தொடங்கி பச்சை பச்சையாய் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று சில ஆண்டுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் தீயாய் பரவியது. அந்த வார்த்தையை டைட்டிலாக வைத்து அடல்ட் ஒன்லி காமெடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

கெளதம் கார்த்திக்

கெளதம் கார்த்திக்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான கடல் படத்தில் அறிமுகமான நவரச நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கு, தொடர்ந்து அவர் நடித்த ஏகப்பட்ட படங்கள் வொர்க்கவுட் ஆகவில்லை. அடல்ட் காமெடி படமான ஹர ஹர மஹாதேவகி படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திய நிலையில், அவருக்கு அந்த படம் வேற லெவல் வெற்றியை தந்தது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து

இருட்டு அறையில் முரட்டுக் குத்து

இப்படியொரு அடல்ட் படத்தில் நடித்துவிட்டாரே கெளதம் கார்த்திக் என ஊர் முழுக்க பேச்சுக்கள் அடிபட்டாலும், தொடர்ந்து இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலும் கெளதம் கார்த்திக் நடித்து இருந்தார். அந்த படம் முதல் படத்தை விட வேற லெவல் ஹிட்டை கொடுத்தது.

மூன்று கவர்ச்சி நடிகைகள்

மூன்று கவர்ச்சி நடிகைகள்

வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த் மற்றும் பேயாக நடித்த சந்திரிகா ரவி என மூன்று கவர்ச்சி நடிகைகளின் தாராளமான நடிப்பு மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் எல்லாம் அந்த படத்தை ரசிகர்கள் மத்தியில் சூப்பராகவே கொண்டு சேர்த்தது. ஃபேமிலி ஆடியன்ஸ் அந்த படத்தின் டைட்டிலுக்கே தியேட்டர் பக்கம் வராதது வேறு கதை.

அடுத்த பாகத்திற்கு மறுப்பு

அடுத்த பாகத்திற்கு மறுப்பு

தொடர்ந்து இரு ஆபாச காமெடி படங்களில் நடித்து தனது பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார் நடிகர் கெளதம் கார்த்திக். இரண்டாவது பாகத்தையும் எடுக்க இயக்குநர் தயாராக இருந்த நிலையில், ஏற்கனவே உடைச்சது பத்தாதா? ஆளை விடுடா சாமி என்கிற ரேஞ்சில் படத்தில் நடிக்க மாட்டேன் என தெறித்து ஓடிவிட்டார்.

ஹீரோ அவதாரம் எடுத்த இயக்குநர்

ஹீரோ அவதாரம் எடுத்த இயக்குநர்

ஃபேமிலி ஆடியன்ஸ் போய்விட்டால், கோலிவுட்டில் மார்க்கெட் போய்விடுமே என பலரும் நடிக்க மறுத்த நிலையில், இயக்குநர் சந்தோஷே ஹீரோவாக இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் களமிறங்கி விட்டார். அவருக்கு ஜோடியாக கரிஷ்மா மற்றும் அக்ரித்தி நடித்துள்ளனர்.

கெளதம் கார்த்திக் ரிலீஸ் பண்றாரு

கெளதம் கார்த்திக் ரிலீஸ் பண்றாரு

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்றாலும், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்ய கெளதம் கார்த்திக் முன் வந்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இரண்டாம் குத்து என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X