August 16, 1947 collection : கௌதம் கார்த்திக் ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : கௌதம் கார்த்திக் நடித்த ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் இப்படம் வசூலித்துள்ள தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பொன்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை, பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கௌதம் கார்த்திக்,புகழ், நடிகை ரேவதி, மதுசூதன் ராவ், ரிச்சர்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

Gautham Karthiks August 16, 1947s 7th day box office collection

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம் ஏப்ரல் 7ந் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியானது.

ஆகஸ்ட் 16, 1947 : திருநெல்வேலியை அடுத்துள்ள செங்காடு எனும் கிராமத்தில் உயர்தர பருத்தி கிடைப்பதால், அங்கு வாழும் மக்களை அடிமையாக்கி ,16 மணிநேரம் வேலை வாங்கி பணம் சம்பாதிக்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் க்ளைவ். வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் இக்கிராம மக்களுக்கு, சுதந்திரம் கிடைத்த செய்தியை மறைக்க நினைக்கிறார் வில்லன் இறுதியில் என்ன ஆனது என்பது தான் ஆகஸ்டு 16 1947 படத்தின் கதை.

ஏதார்த்தமான நடிப்பு : சிம்புவின் பத்து தல படத்தில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த கௌதம் கார்த்திக் இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, தாய், தந்தை இல்லாத பரமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் அம்மாவாக ஒரே சீனில் வரும் நீலிமா ராணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் இதற்காக அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

குவியும் பாராட்டு : பீரியட் திரைப்படத்தை துணிந்து எடுத்த இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் தென்தமிழகத்தில் வாழ்ந்த மக்களை கண்முன் கொண்டுவந்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். படத்திற்கு ஏற்பட பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளன. அறிமுக நடிகை ரேவதி தனது கேரக்டரைமுழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். புகழ், சென்டிமென்ட் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

Gautham Karthiks August 16, 1947s 7th day box office collection

ஆகஸ்ட் 16, 1947 மொத்த வசூல் : ஆகஸ்ட் 16, 1947 படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது., பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக வசூலை அள்ளி வருகிறது. இந்திய அளவில் சுமார் ₹ 1.13 கோடியை வசூலித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம் ஏழாவது நாளான இன்று 0.04 கோடி வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தமிழ் புத்தாண்டு,அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூலி கணிசமாக அதிகரிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X