‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'
கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்தப் படத்தை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்குகிறார்
சென்னை: கௌதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று துவங்கியது.
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பெயர் குறிப்பிடும்படியான படங்கள் அவருக்கு அமையவில்லை. இதையடுத்து அவர், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகிய அடல்ட் செக்ஸ் காமெடி படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தார்.

இந்த படங்களை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.
'தேவராட்டம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. கௌதம் கார்த்திக், ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் விழாவில் பங்கேற்றனர்.
கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவும் - முத்தையாவும் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம் ஆகும்.
தேவராட்டம் படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் K .L படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி, இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் நடைபெற்று வருவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











