7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் பிரபல நடிகரின் படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!
சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.

இதேபோல் நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் திருமணம் செய்து கொள்வதாக 70 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகார் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் நடிகை யாஷிகாவின் கார் விபத்துக்குள்ளானது மற்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது. மேலும் கவுதம் கார்த்திக்கின் சிப்பாய் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கவுள்ளது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











