Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் !
சென்னை : ஜனரஞ்சகமான குடும்ப திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே எப்போதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் 2009ஆம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாக உள்ளது.
இதில் பிரபல இளம் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக கசிந்த தகவலை அடுத்து இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

திரைப்படங்களில் மட்டுமே
இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டுக்குடும்பம் என்பதே இல்லை, தனித்தனி குடும்பங்களாக அனைவரும் வாழ்ந்து வரும் நிலையில் திரைப்படங்களில் மட்டுமே அது போல மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தை காண வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மாயாண்டி குடும்பத்தார்
நிஜத்தில் பார்க்க முடியாத அல்லது அரிதாக இருக்கக்கூடிய கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு தமிழில் அவ்வப்போது வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வரும் நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

சென்டிமெண்ட் காட்சிகள்
தருண்கோபி, சீமான், மணிவண்ணன், பொன்வண்ணன், சிங்கம் புலி, ரவி மரியா என பல பிரபலமான நடிகர்கள் இதில் நடித்திருக்க சென்டிமெண்ட் காட்சிகள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு பார்ப்பவர்கள் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் தாரை தாரையாக வரவழைத்தது.

இயக்குனர் நந்தா பெரியசாமி
அண்ணன்கள் தம்பிகள் பாசத்தை தமிழ் மண் மாறாமல் கூறிய மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் பாகம் 2 இப்பொழுது உருவாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை ஆர்யா நடித்த "ஒரு கல்லூரியின் கதை" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கவுள்ளார்.

கௌதம் கார்த்திக் ஹீரோ
இயக்குனர் நந்தா பெரியசாமி ஏற்கனவே மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வரும் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்த நிலையில் மாயாண்டி குடும்பத்தார் பாகம் இரண்டில் கதாநாயகனாக பிரபல இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இதர நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.